Saturday, December 14, 2013

விடைக் கொடி


விடைக் கொடி
--------------------

விடைக்கொடி என்பது சைவ சமயக் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் கொடியாகும். இக்கொடியானது இடபக் (ரிசபக்) கொடியென்றும் அறியப்படுகிறது. சிவபெருமானது வாகனமும், காவலனுமான நந்தியினைப் போற்றும் விதமாக இக்கொடி அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் கொடி என்பதால் சைவச்சின்னமாகவும் இக்கொடி போற்றப்படுகிறது.
...
வீரசைவ அரசர்கள் பலரும் இக்கொடியை தங்களின் நாட்டுக் கொடியாக உபயோகம் செய்துள்ளார்கள். பாரதத்தின் கலிங்கத்தினை சேர்ந்த மாகன் என்ற வீரசைவ மன்னன் ஐனநாத மங்கலம், மண்முனை (மட்டக்களப்பு) கோகர்ணம் (திருக்கோணமலை, சிங்கை நகர் (வன்னி), நல்லூர் (யாழ்ப்பாணம்) ஆகிய பிரதேசங்களை இக்கொடியின் கீழ் ஆண்டார்.

சிவபெருமானினை "செங்கண் விடைக்கொடி யானும்" என்று தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் "ஏறார் கொடி எம் இறை" என்று இரண்டாம் திருமுறையில் சிவபெருமானைக் குறித்து கூறுகிறார்.

சிவாலயங்களில் விடைக் கொடியேற்றத்துடன் பத்துநாள் பெருந்திருவிழா தொடங்குகிறது. அதுபோல நந்திக் கொடி இறக்கத்துடன் பெருந்திருவிழா முடிவுருகிறது.

சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரின் படம் அச்சிடப்பட்ட கொடியானது சிவாலயங்களில் பிரதோச தினத்தன்று ஏற்றும் வழக்கம் இலங்கை சிவாலயங்களில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இம்முறை சற்றுபரவலாக கடைபிடிக்கப்படுவதில்லை.
-------

விடைக்கொடியின் மகிமையை அனைத்து சைவர்களும் உணர்ந்து மீண்டும் தமிழகத்தில் விடைக்கொடி பட்டொளி வீசி பறக்க செய்ய வேண்டுகிறேன்.
Mehr anzeigen

No comments:

Post a Comment