சொர்க்க வாசல், பரமபத வாசல் இவை இரண்டும் ஒன்றா? மாறுபட்டதா?
பரமபதம் எனில் மிக உயரிய ஸ்ரீமந் நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்தையே குறிக்கும். வைஷ்ணவ ஆகமங்களில் பரமபத வாசலுக்கு விசேஷ பூஜைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தாதா, விதாதா, பதங்கர், புவங்கர், பதிரன், வருணன், கஜலக்ஷ்மீ மற்றும் பல தேவதைகளை ஆராதித்து பிறகு அந்த கதவுகளின் திறவுகோலுக்கு விஷ்ணுவை பூஜை செய்யுமாறு ஆகமங்கள் பணித்திருக்கின்றன. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், பொதுப்படையாக நாம் கூறும் ஸ்வர்கம், நரகம் ...என்பதற்கும், மேலே குறிப்பிட்டுள்ள பரமபத வாசலும் வேறானவையே. எனினும், வழக்கத்தில் சொர்க்க வாசல் என்றே அழைக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. எவரொருவர் ஸ்ரீமந் நாராயணனிடம் சரணாகதி அடைந்து தங்களின் வாழ்க்கையை நடத்துகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் வல்ல பகவான் தனது திவ்ய கடாக்ஷத்தினால் நம்முடைய அனைத்து கர்ம வினைகளையும் போக்கி வைஷ்ணவ சம்ப்ராயத்தில் மிகவும் உயர்ந்த பதமான பரமபதத்தில் நம்மை இருக்க அருளுவார் என்பதின் வெளிப்பாடே நாம் சொர்க்க வாசல் அல்லது பரமபத வாசல் உள்செல்வது

No comments:
Post a Comment