ஆதிசங்கரருக்கு ஆறு கால்கள்! அது எப்படி?
! லலிதா சகஸ்ரநாமத்தை அடிப்படையாக வைத்தே ஆதிசங்கரர் சவுந்தர்ய லஹரியைப் பாடினார்.... அதில் அம்பிகையின் பாதத்தில் ''ஷட்சரணதாம்'' என்று குறிப்பிடுகிறார். இதன்பொருள் ஆறுகால்களால் விழுகிறேன் என்பதாகும். மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐந்து புலன்கள் உள்ளன. இத்துடன் மனம் என்னும் கருவியும் சேர்ந்து ஆறு புலன்கள் ஆகிறது. மனம் மனிதனின் எண்ணங்களை எங்கெங்கோ இழுத்துச் சென்று மற்ற உறுப்புக்களால் அதை செய்ய வைக்கும். இவற்றை அவளிடம் ஒப்படைத்து அடைக்கலம் புகுந்துவிட்டால் அவள் நம்மைக் கரைசேர்ப்பாள் என்பதே உட்கருத்து.
No comments:
Post a Comment