சம(ஸ்)கிருதம்! சம=சமன்=equal / கிருதம்=மொழி=language தமிழுக்குச் சமாந்தரமாக ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழியே சம(ஸ்...)கிருதம். தமிழே காலத்தால் மூத்த ஞானமொழி ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்களின் மொழிகளே. சம=சமமாக, கிருதம்=மொழி. தமிழுக்குச் சமமாக ஞானிகளால் ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக உருவாக்கப்பட்ட மொழிதான் சம(ஸ்)கிருதம். தமிழே ஆதிமொழி. தமிழே சித்தர்களின் உயர் ஞானமொழி. இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற மொழிகளைவிட தமிழுக்கும் சம(ஸ்)கிருதத்திற்குமே நிறையப் பொதுப்பண்புகள் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகள் சம(ஸ்)கிருத சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன தவிர இலக்கண அடிப்படையில் பொதுப்பண்புகள் தமிழை விடக் குறைவே. சம(ஸ்)கிருதம் நம் தமிழ்ச்சித்தர்கள் உருவாக்கிய மொழியே. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்கள் மொழியே. ஆதலால்தான் எம் முன்னோர் சம(ஸ்)கிருதத்தை கோவில் வழிபாட்டு மொழியாக ஏற்றுக்கொண்டனர். நம் பெயர்களில் சம(ஸ்)கிருதம் யாரும் திணித்ததால் வரவில்லை. சித்தர் மொழிகளை நம்மொழியாக ஏற்றுக்கொண்டதனால் வந்தது. ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. நிறையப்பேர் இந்தி, உருது போன்ற வடமொழிகள் சம(ஸ்)கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியின் மூல மொழி துருக்கி. அதில் சமஸ்கிருதம், உருது, அரபி போன்ற மொழிச்சொற்களும் சேர்ந்து உருவானதுதான் இந்தி. உண்மையில் சம(ஸ்)கிருதம் மற்ற மொழிகளில் எவ்வாறு கலந்திருக்கிறதோ அது போலவே இந்தியிலும் அதிகமாகக் கலந்துள்ளது. குருகுலம் இருந்தபோது அனைத்துத் தரப்பு மக்களும் தமிழ், சம(ஸ்)கிருதம் இரண்டுமே கற்றனர். காலப்போக்கில் பூசாரிகளே சம(ஸ்)கிருதம் கற்றனர். சாதாரண மக்களுக்கு அதனால் பயனில்லாததால் கற்பதைத் தொடரவில்லை. இன்று தமிழ்நாட்டில் தமிழ் பயன்பாடு குறைந்து ஆங்கிலம் வளர்வது போல, மக்கள் தமக்கு எதனால் பயன்பாடு உள்ளதோ அதனையே கற்றனர். சித்தர் தமிழை நிறைவாகக் கற்றோனே கசடு அறக் கற்றவன். வள்ளுவப் பெருமான் மாபெரும் சித்தர். இதை வெகுவிரைவில் பாரறியும். தமிழ் சித்தன் மொழி. மெஞ்ஞான சூட்சுமங்கள் நிறைந்த நிறைமொழி. சித்தர்கள் அழிய மாட்டார்கள். ஆதலால், அவர்கள் மொழியான தமிழ் என்றுமே அழியாது. வருங்காலத்தில் உலகமாந்தரே தமிழ் கற்பர். ஏனெனில் சித்தர் மொழியான தமிழைக் கற்றாலே வரப்போகும் ஊழிக்கூத்திலிருந்து உலகமாந்தர் தம்மைக் காக்க முடியும். 2037க்கு முன் ஞானச்சித்தர் காலம் பிறக்கும். மீண்டும் சித்தர்கள் இம்மண்ணில் எம்முன்னே நடமாடுவர். உலகமாந்தரெல்லாம் தம்மைக் காத்துக்கொள்ளும் பொருட்டு சித்தநெறியை நாடுவர். சித்தநெறியிலுள்ள மறைபொருளையறிய வேண்டி தமிழ் கற்பர். #சித்தர்வாக்கு நம்மால் ஆதாரம் தர முடியவில்லை. இருந்தும் ஒரு தகவலாகத் தருகிறேன். அதாவது, சித்தர் ஓலைக் குறிப்புகளின் படி தமிழ் பல அண்டங்களில் பேசப்படுகின்றது. சித்தர்கள் மொழியான தமிழ் காலம் வரையறுக்கப்பட முடியாத ஆதிமொழி. மூத்தகுடி தமிழ்க்குடி . இதோ ஒரு சான்று:
No comments:
Post a Comment