தன் திருவடிகளையே சிந்திக்கும் அடியார்களுக்கு, அப்படி அதில் என்ன தான் ஆனந்தம்
கிடைக்கிறது என்று கிருஷ்ணருக்கே, ஒருமுறை ஆச்சரியம் வந்து விட்டதாம். அதனால் தன்
கால்பெருவிரலை தானே சுவைக்கத் தொடங்கினாராம். அந்த நேரத்தில், 16 வயது
மார்க்கண்டேயருக்கு அந்தக்காட்சியைப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. கிருஷ்ணரைப்
பிரார்த்தித்தார். மாயனாகிய கிருஷ்ணன், பலத்தமழை பெய்யச்செய்தான். அவரது
ஆஸ்ரமத்தைச் சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தண்ணீரில் ஒரு ஆலிலை
மிதந்து வந்தது. அதில் கிருஷ்ணர் கட்டை விரலை வாயில் சுவைத்த வண்ணம்
படுத்திருந்தார். அந்தக் காட்சி கண்டு பரவசம் அடைந்த மார்க்கண்டேயர், அக்குழந்தை,
மூச்சுக்காற்றை இழுக்கும்போது கொசுவாக மாறி, உள்ளே போனார். புறவுலகில் என்னென்ன
உ<ண்டோ, அத்தனையையும் உள்ளே கண்டார். தன் ஆஸ்ரமமும் கிருஷ்ணருக்குள் இருக்கக்
கண்டார். மீண்டும் மூச்சுக்காற்றில் வெளியே தள்ளப்பட்டு வெளியேவந்தார். உலகமே அவன்
தான் என்பதைப் புரிந்துகொண்டார்.
No comments:
Post a Comment