ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதியை விரதநாளாக பெரியவர்கள்
நிர்ணயித்துள்ளனர். அது வளர்பிறையாகவோ அல்லது தேய்பிறையாகவோ இருக்கும். முருகனுக்கு
உ<ரியது வளர்பிறை சஷ்டி. சிவனுக்கு தேய்பிறை சதுர்த்தசியன்று மாதசிவராத்திரி
விரதமிருப்பர். ராமனுக்கு வளர்பிறை நவமியில் விரதமிருந்து ராமாயணம் படிப்பர்.
கிருஷ்ணருக்கு தேய்பிறை அஷ்டமி உகந்தநாள். அம்பிகைக்கு பவுர்ணமி திதியில்
விரதமிருப்பது சிறப்பு. ஆனால், விநாயகருக்கு வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி
இரண்டிலும் விரதமிருப்பர். இரண்டிற்கும் வெவ்வேறான பலன்களும் உண்டு. வளர்பிறையில்
விரதமிருந்தால் விருப்பங்கள் நிறைவேறும். செல்வ வளம் பெருகும். தேய்பிறையில்
விரதமிருக்க சங்கடங்கள் நீங்கும். மனக்கவலை அகலும். முயற்சி வெற்றி பெறும்.
தேய்பிறை சதுர்த்தி விரதத்தையே, "சங்கடஹர சதுர்த்தி' என்பர்.
No comments:
Post a Comment