Tuesday, February 11, 2014

நவக்கிரகங்களுக்கு ப்ரீதி செய்வதற்காகப் படைக்கப்பட்ட தேங்காய்-பழம் ஆகியவற்றை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது என்கிறார்களே





 

 

கேள்வி: நவக்கிரகங்களுக்கு ப்ரீதி செய்வதற்காகப் படைக்கப்பட்ட தேங்காய்-பழம் ஆகியவற்றை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது என்கிறார்களே... சரியா?


பதில்: தேங்காய்-பழங்களை வீட்டுக்குக் கொண்டு வரலாம்; அதை உட்கொள்ளவும் செய்யலாம்; தவறில்லை.

நாம் உண்டு மகிழ, நவக்கிரகங்களுக்குப் படைக்கிறோம். கிரகங்களின் பார்வை பட்டு தூய்மை பெற்ற அந்தப் பொருட்களை நாம் ஏற்று மகிழும்போது, அவற்றின் தூய்மை, நம்மையும் தூய்மைப்படுத்தி, நல்வழியில் செல்ல வைக்கிறது. கிரகங்களின் அருளானது, பிரசாதப் பொருளின் வாயிலாக நம்மில் கலக்கிறது. அது, நம்மை வாழ வைக்கிறது.

இறையுருவங்களுக்கு நாம் செய்யும் பணிவிடைகள் அத்தனையும் நமக்காகவே. இறைவனுக்கு பசி, தாகம், ஆசை, பாசம் போன்ற எதுவும் இல்லை. இறையருளுடன் இணைந்த சுத்தமான உணவானது, உடல்-உள்ளம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதுடன், அறிவைப் புகட்டி ஆனந்தத்தில் ஆழ்த்த ஏதுவாகும். ஆகவே, விபரீத விளக்கங்களை நம்பாதீர்கள்!

(
சக்திவிகடன் இதழின் கேள்வி-பதில் பகுதியில் இருந்து...)

No comments:

Post a Comment