திருமணம், கிரகப்பிரவேசம் போல முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் சுபநிகழ்ச்சி
தான். இன்னும் சொல்லப்போனால், எந்த சுபவிஷயத்தையும், முன்னோர் வழிபாட்டுடன் தொடங்க
வேண்டும் என்றே சாஸ்திரம் சொல்கிறது. திருமணச்சடங்கில், "நாந்தி சிராத்தம்' என்ற
பெயரில் முன்னோர்களை வழிபடுவர். அமாவாசையன்று, விரதமிருந்து மறைந்த முன்னோர்களுக்கு
திதி கொடுத்தால் மகிழ்ச்சியுடன் நம்மை ஆசிர்வதிப்பர். பீகாரிலுள்ள கயா என்னும்
புண்ணிய க்ஷேத்திரம் பிதுர்வழிபாட்டிற்கு உகந்தது. இங்குள்ள பல்குனி நதியும்,
அட்சயவடம் என்னும் மரமும் முன்னோர்களுக்கு விருப்பமானவை. இங்கு விஷ்ணுபாதத்தில்
பிண்டம் வைத்து செய்யப்படும் தர்ப்பணத்தை, முன்னோர்கள் நேரில் வந்து ஏற்றுக்
கொள்வதாக ஐதீகம்
No comments:
Post a Comment