அறம் செய விரும்பு..!
நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க வேண்டும், கொடுக்கும் போது வேண்டியவர், வேண்டாதவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பாராது தேவைப்படுவதை கொடுக்க வேண்டும். இதுவே அறம் என்றும் சொல்லப்படும்.
அறம் செய்வதையும் விட அறம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிகவும் உயர்ந்தது. அதனால் தான் ஔவையார் "அறம் செய விரும்பு" என்றார்....
சித்தர் பெருமான் திருமூலரும் இந்த அறம் செய்வதை மிக எளிமையாக யாரும் செய்ய கூடிய வகையில் விளக்கிச் சொல்கிறார்.
யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே. -திருமூலர்.
எப்பொழுதும் இறைவணக்கம் செய்யும் போது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குவதும், எங்கேனும் பசு ஒன்றைக் கண்டால் அந்தப் பசுவிற்குச் சிறிது உணவு கொடுப்பதும், உணவு உண்ணும் போது வறியவர்களுக்கு சிறிது உணவிடுதலும், மற்றவர்களுடன் பேசும் பொழுது இனிய சொறகளால் பேசுவதும் அறமாகும்.
இவற்றை அனைவராலும் கடைப்பிடிக்க முடியுமே..!
இனி நாமும் அறம் செய்வோம்..!
மற்றவர்களுக்கும் அறம் செய விரும்பு என அன்பாகச் சொல்வோம்..!
அடிக்கடியும் சொல்வோம்..!

No comments:
Post a Comment