Tuesday, February 4, 2014

தாய்க்கு தலைப்பிள்ளையும்தந்தைக்கு கடைப்பிள்ளையும் கொள்ளிவைக்கவேண்டுமென்றுசொல்கிறார்களேஅது ஏனென்று தெரியுமா?


தாய்க்கு தலைப்பிள்ளையும்

அது ஏனென்று தெரியுமா?

வாருங்கள் சற்று அலசலாம்....

குழந்தைப்பிறப்பிற்கு ஆணும் பெண்ணும் சரிசமமானமுறையில் வித்தானவர்களென்றதெளிவு
தோன்றியிராதகாலமது.

'திருமணத்திற்குப்பின் குழந்தைபிறக்கவில்லையெனில்,
அது பெண்ணின் குறைபாடேயொழிய ஆண்மீது எவ்விதமானகுறைபாடுமில்லை' என்ற தவறானகருத்தைக்கொண்டிருந்தசமூகந்தான் நம் சமூகம்.

அதனாலேயே குழந்தைப்பேறில்லாத பெண்களுக்கு சமூகம்வைத்தபெயர் மலடி.

மலடு என்றசொல்லிலிருந்துவந்ததுதான் மலடி.

மல்+அடு=மலடு

'மல்' என்பதற்கு வளமிக்க, வளம்பொருந்திய என்ற பொருட்களுண்டு.
'அடு' என்பதற்கு அல்லாத/அற்ற என்று பொருள்.

மணமானபெண், மலடியில்லை என்ற பெயரை பெற்றுத்தருவது முதற்குழந்தைதான்.

இதனாலேயே முதற்குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பானது அன்றைக்கு இறுக்கப்பட்டு
தாயவள் இறந்துபோகிறபோது அவளுக்கு கொள்ளிவைக்கிறவுரிமை முதற்குழந்தைக்குக்கொடுக்கப்பட்டது.

சரி தந்தைக்கு?

அக்காலத்தில் ஆணின் ஆண்மையென்பது
அவன் எத்தனைக்குழந்தைகளுக்குத்தந்தையாகிறானென்ற
எண்ணிக்கையைப்பொருத்தே பேசப்பட்டது.

இந்த நுணுக்கமான மனநிலைதான் அக்காலத்தில் ஒருகுடும்பத்தில் புற்றீசற்போல பொலபொலவென குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டதற்கு முதல்வித்து.

இரண்டாவதுவித்தை எல்லோருமே அறிவோம்.
(மருத்துவவசதியில்லாத அந்தக்காலத்தில் குழந்தைகள் சொற்பகாலத்திலேயே இறந்துபோவதைக்குறிப்பிடுகிறேன்)

அவன் குடுகுடுகிழவனானாலும் குழந்தைபெறவியலுமென்ற தெளிவும்,
பெண்களுக்கான Menopause பற்றியதெளிவும் (கருமுட்டை உருவாகாமற்போகும்நிலை) இல்லாதகாலமல்லவா அது?

ஆகையால் ஆணொருவனின் ஆண்மையின் அளவுகோலாகவிருந்தது,
அவனுடைய கடைசிக்குழந்தைப்பிறப்பின்போது அவனுக்கு என்னவயது என்பதுதான்.

அதற்குப்பிறகும் அவனால் குழந்தைபெறவியலும்.
ஆனால் மனைவியின் Menopause பற்றித்தான் அவனுக்குத்தெரியாதே!

இதனால் கடைப்பிள்ளைக்கும் தந்தைக்குமான பிணைப்பானது இறுக்கப்பட்டு
தந்தை இறந்துபோகிறபோது அவருக்கு கொள்ளிவைக்கிறவுரிமை கடைக்குழந்தைக்குக்கொடுக்கப்பட்டது.

இவ்விரண்டுமே தவறானகருத்துகளென்றாலும்
இன்றுவரையிலும் நம் மரபு அதுதானென்றாகிவிட்டது.

இம்முறைப்படிப்பார்த்தால்,
முதற்குழந்தை பெண்குழந்தையாயிருந்தாலும் அவர்தான் தாய்க்கு கொள்ளிவைக்கவேண்டும்.

ஆனால் நாம்தான் பெண்களை சுடுகாட்டுக்குள்ளேயே அனுமதிப்பதில்லையே!

('மிக அரிதாகவே பெண்கள் இதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்' என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்.)

- ஃபீனிக்ஸ் பாலா.

No comments:

Post a Comment