ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. குளிக்காமல் பூஜை செய்ய மனம் மறுக்கிறது. இந்தச்
சூழலில், பூஜை செய்ய முடியவில்லையே, நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியவில்லையே என்ற
ஆதங்கம் மட்டும் உள்ளுக்குள் இருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மாற்றுவழி
இருக்கிறது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும், தந்தைக்காக மகன் அல்லது
மகளும், வசதி படைத்தவர்களுக்காக புரோகிதரும், அண்ணனுக்காக தம்பியும் பூஜை
செய்யலாம். எங்காவது, புண்ணியதலத்துக்குப் போவதாக நேர்ந்து கொண்டு, அங்கே போக
முடியாத நிலை ஏற்பட்டாலும், மேற்கண்டவர்கள் அவர்களது பிரதிநிதியாக சென்று வரலாம்.
இப்படி செய்தாலே, சம்பந்தப்பட்ட நபருக்கு புண்ணியம் கிடைத்து விடும் என்று "நிர்ணய
ஸிந்து' என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு "பிரதிநிதி நியாயம்' என்று
பெயர்.
No comments:
Post a Comment