.
ஸ்ரீமந் புருஷோத்தமன். தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர். தனது சுதர்சனச் சக்கரத்தால் அதர்மத்தை அழித்து, தர்ம...த்தை நிலைநாட்டியவர்.
அவரின் திருக்கரத்தில் உள்ள சுதர்சனம், பக்தர்களை தீமைகளில் இருந்து காக்கவல்லது. அந்த சுதர்சனம் எப்போது எங்கே தோன்றியது?
ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க, இந்திரன் திருக்கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தான். பார்க்கின்ற பொருளெல்லாம் பரம்பொருள் என்பதை இந்திரன் உணர்ந்திருக்கிறானா என்பதைச் சோதிக்கத் திருவுளம் கொண்டார் ஈஸ்வரன். மகா ருத்ர சொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன், தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்றெண்ணி, ருத்ரன் மீது தன் கையில் உள்ள வஜ்ராயுதத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ருத்ரன் மீது பட்டதும், அவர் உடல் சிலிர்த்து, கோபாக்னி உண்டாகி, வியர்வைத் துளிகளாக மாறி, கடலில் சிதறி விழுந்தன. பிறகுதான், வந்திருப்பது சிவனார் என அறிந்த இந்திரன், மனம் வருந்தி அவரின் திருவடியில் விழுந்தான். கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடிவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ஆக, இந்திரனின் அறியாமையாலும் அவசரத்தாலும் தோன்றினான் ஜலந்தரன். ருத்ரனின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியவன், பிரம்மாவின் வரம் பெற்றவன் என்பதால், தன்னை எவராலும் அழிக்கமுடியாது என இறுமாப்புடன் இருந்தான் ஜலந்தரன். மூவுலகையும் வென்று, தேவர்களை அடிமைப்படுத்தினான். நாளாக ஆக, அவனது ஆணவமும் அதிகரித்தது.
பிரம்மாவையும் திருமாலையும்கூட வெற்றி கொண்டான்; கொடுமைகள் பல புரிந்தான். முடிவில், தன்னைப் படைத்த ஈஸ்வரனைவிட தான் உயர்ந்தவன் என கர்வம் கொண்டு, சிவனாரை அடிபணியச் செய்யும் முயற்சியாக, திருக்கயிலாயம் புறப்பட்டான். வழியில், வேதியர் வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார், சிவனார். சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன். சிவபெருமானை வெல்ல வேண்டுமென்றால், முதலில் என்னால் நிர்மாணிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம் எனச் சவால் விட்டார் சிவனார். அதனை ஏற்றான் ஜலந்தரன். வேதியராக வந்த சிவனார், தன் பாத விரல்களால் பூமியைக் கிளறி, மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவமாக உருவாக்கினார். முடிந்தால், இந்த மகா சுதர்சனச் சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக்கொள், பார்ப்போம்! என்றார் ஜலந்தரனிடம். உடனே அவன், அந்தச் சுதர்சனச் சக்கரத்தை அப்படியே பெயர்த்தெடுத்தான்; தன் சிரசின் மீது வைத்துக்கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல், இருகூறாகப் பிளந்தது. ஜலந்தரனின் உடல் அழிந்தது. ஆனாலும், அழியா வரம் பெற்ற அவனது ருத்ர சக்தி, சுதர்சனச் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு, மகா சுதர்சனம், மகேஸ்வரனின் திருக்கரத்தில் அமர்ந்தது.

No comments:
Post a Comment