அதுவா, இதுவா..?
------------------------
ஒரு நாள் அதிகாலை துறவி ஒருவர் தனது சீடர்களை அழைத்தார். "எனக்கொரு சிக்கல்..?" என்றார் குரு. சீடர்களுக்கு வியப்பு, "சிக்க...லுக்கெல்லாம் அப்பாற்பட்ட குருவுக்கே சிக்கலா..?"
என் மனதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு விடைகாணவே உங்கள் எல்லோரையும் அழைத்தேன்" என்றார் குரு.
"என்ன சந்தேகம் குருவே..?" என்று ஆவலுடன் ஒருமித்த குரலில் கேட்டனர்.
"நான் ஒர் கனவு கண்டேன்..! அதில் வண்ணாத்திப்பூச்சியாக ஒவ்வொரு பூக்களில் தேன் குடித்தேன். திடீரென்று கனவு கலைந்து விழித்ததும் துறவியாகி விட்டேன். இப்போது என் கேள்வி..? நான் யார்..?" சீடர்கள் விழித்தார்கள்.
"எப்படி நான் வண்ணாத்திப்பூச்சியாகவும்.., மனிதனாகவும் இருக்க முடிந்தது. இதில் இப்போது எது தூக்கம்..? எது விழிப்பு..? துறவியாகிய நான் தூங்கிய போது கனவில் பட்டாம் பூச்சியாக இருந்தேனா..? அல்லது அந்த பட்டாம் பூச்சிதான் தூக்கத்தில் துறவியாக கனவு காண்கிறதா..? கனவு என்பது என்ன..? விழித்த பின்னர்தானே கனவு என்பது தெரிகிறது. அப்படியிருக்க நான் யார்..? இந்த நான் என்பதின் பங்கு இதில் என்ன..?" என்றார். சீடர்கள் பதில் தெரியாது திகைத்தனர்.
சிரித்துவிட்டு குருவே சொன்னார். "பகலின் காட்சிகளை விட கனவில் நடப்பவை நிஜமாகவே இருக்கும். விழிப்பு நிலையில் கனவுகள் மறந்து விடுகின்றன. பகலின் காட்சிகளைவிட கனவில் நடப்பவை முழுமையாக உண்மையாக இருக்கிறது. விழிக்காமல் தூங்கி கொண்டிருந்தால் அவன் காணும் கனவு உண்மையல்ல என்ற உணர்வே அவனுக்கு வராது..!
வாழ்கையே கூட ஒரு பெரிய நீண்ட கனவாக ஏன் இருக்க கூடாது. மரணம்தான் விழிப்பாகவும் இருக்கலாமே. உண்மைதானே நாம் காணும் கனவை எப்படி நம் விருப்பப்படி நாம் இயக்குது இல்லையோ அதே போல் நம் வாழ்கையும் முழுமையாக அதன் போக்கில் நாம் வாழ வேண்டும்

No comments:
Post a Comment