Thursday, March 6, 2014

கடமையே பெரிய வேள்வி

கடமையே பெரிய வேள்வி

உன் கடமைகளைச் சரிவர ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார். இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, கடமையை மறந்து விடாதே. மாட்டுக்காரன் மேய்ச்சல் காட்டுக்கு ஓட்டித்தான் போவான். மேய வேண்டியது மாடுதானே! உன் கடமையை செய். பலனுக்காக கையேந்தாதே. அதுவே பெரிய வேள்வி ஆகும்.

புடலங்காயில் ஒரு சுமையைக் கட்டினால் வளையாது நீண்டு வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால், வளையாது நேராக வாழ்வான். நீ எங்கு சென்றாலும்... உன் கடமையைச் செய். உன்னுள் இருந்து பகவான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இறைவன் உன்னுடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள். நீ அவனுக்கு மிகவும் நெருக்கமானவன். கண் இமைகள் விழியைக் காப்பது போல, இறைவன் உன்னைக் காப்பாற்றுவான். அவன் உன்னை விட்டு விலகமாட்டான். நீயும் அவனை விட்டு விலக முடியாது. இந்த நிமிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்துச் செயல்படாதே! மாறாத அன்புடன் உன் கடமையைச் செய்.

No comments:

Post a Comment