பசுவுக்கு உணவிடாமல் இருப்பது, அடிப்பது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பசுவின்
இறப்புக்கு காரணமாக இருப்பது ஆகியவற்றால் ஒருவருக்கு கோஹத்தி தோஷம் உண்டாகும் என
சாஸ்திரம் கூறுகிறது. இதனால்,பாவத்தைச் செய்தவர் மட்டுமல்லாமல், அவரது சந்ததியும்
தொடர்ந்து பாதிக்கும். இதற்கு பிராயச்சித்தமாக மஹார்ணவம் என்னும் நூலில், ஒரு
பரிகாரம் கூறப்பட்டுள்ளது. பசு ஒன்றை வாங்கி ஒரு மாதம் வரை வீட்டில் வைத்து தினமும்
பசுவுக்கு நன்கு உணவளித்து பராமரிக்க வேண்டும். அதை சுதந்திரமாக நடக்க விட
வேண்டும். காலையிலும், மாலையிலும் அந்தப் பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கி
கோபூஜை செய்ய வேண்டும். ஒரு மாதம் கழிந்த பின், பசுவை நல்ல முறையில் பராமரிக்கும்
நபரைத் தேர்ந்தெடுத்து தானம் அளித்து விட வேண்டும். இதனால், பசுதோஷம் நீங்கி நன்மை
உண்டாகும்.
No comments:
Post a Comment