Saturday, April 19, 2014

கவலை!

கவலை!
விவேகானந்தரின் தந்தை இறந்த சமயம், அவரது குடும்பம் வறுமையிலும் கவலையிலும் தோய்ந்திருந்ததைக் கண்ட இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தரிடம், ""உன்னுடைய கவலைகளை அன்னையிடம் முறையிடு. அவள் பார்த்துக் கொள்வாள்'' என்று கூறி, அவரை ஆலயத்துக்கு அனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் கழித்து, கண்ணீருடன் திரும்பிய விவேகானந்தரிடம், ""என்ன முறையீடு செய்தாயா?'' என்று கேட்டார் பரமஹம்சர்.
...
""மன்னிக்க வேண்டும் குருநாதரே, நான் அன்னையின் முன்பு என்னையே மறந்துவிடுகிறேன். நானே அங்கு இல்லாதபோது, என் கவலைகள் எப்படி இருக்கும்? என்னால் அன்னையிடம் முறையிட முடியவில்லை...'' என்றார்.
பரமஹம்சர் சிரித்துக் கொண்டே, ""உன்னைச் சோதிக்கவே அன்னையிடம் அனுப்பினேன்... உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். இனி உன் நிழலில் ஆயிரம் பேர் அமர்வார்கள்'' என்று கூறி விவேகானந்தரை வாழ்த்தினார்.

No comments:

Post a Comment