Friday, April 4, 2014

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று ஏன் சொல்கிறார்கள்?


சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று ஏன் சொல்கிறார்கள்?
கை, கால் வலி இருந்தால் சுக்கை உரசிப்பூசுவதுண்டு. சுக்கு கசாயம் சளித்தொல்லை உள்ளிட்டவற்றை நீக்குகிறது. இதற்கு எந்த பக்க விளைவும் கிடையாது. அக்காலத்தில், வாரம் ஒருமுறை சுக்கு கசாயம் குடிப்பது வழக்கமாய் இருந்தது. இன்று பல நோய்கள் வர காரணம், நாம் நம் பாரம்பரிய மருந்துகளை மறந்தது தான்! இதே போல, தெய்வங்களிலேயே உயர்ந்தவர் சுப்பிரமணியர். இது சமஸ்கிருதப் பெயர். இதை "சு+ப்ரஹ்மண்யர்' என்று பிரிப்பர். "சு' என்றால் "மேலான'. தன்னை எதிர்த்த சூரர்களை மற்ற தெய்வங்கள் வதம் செய்தனர். ஆனால், எதிரியான பத்மாசுரனைக் கொல்லாமல் ஆட்கொண்டு, எதிரியையும் மன்னித்தவர் என்பதால், இவர் தெய்வங்களில் உயர்ந்தவர் ஆகிறார்.

No comments:

Post a Comment