ஸ்ரீ பரமாசாரியார்
தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டு விடக்கூடாது.
...

ஜோதிர்லிங்கம் குளிர்ந்தால் உலகமெல்லாம் குளிரும்; அதற்காகத்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்கிறோம்.
நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிய தண்ணிரில் அமுக்கிவிடவேண்டாம் அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.
ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகரஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைத்துவிடும் என்கிறார்கள்.
பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும் இப்படியே அவன் பக்கமாக நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிடவேண்டும.
நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிருந்தியானால் அயேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ ஸ்வாமியையே திட்டுவோம். நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வருவதற்கு வழி என்ன?
ஒரு ராஜகுமாரன் காட்டில் வேடர்கள் மத்தியில் – அதே வேஷத்தில் வளரும்போது தன்னையும் வேடன் என்று நினைத்துக் கொள்கிறான். அதே மாதிரி நாமெல்லாம் ஜவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான்.
ஜசும், ஸபடிகமும் ஒரே மாதிரிரான் வெளிப்பார்வைக்ககு இருக்கின்றன. ஆனால், ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர ஸ்டிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்த வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ… அதுதான் உருகி மறுபடியும் தான் ஸவயமான பூர்வ ரூபத்தை அடையமுடியும்.
நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈஸ்வரன் நமக்கும் கை கொடுப்பார். அவர்தான் நமக்கு கை கொடுக்கிறார். கால் கொடுக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும்.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கின்ற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது

No comments:
Post a Comment