எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில்
அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் "பலச்ருதி' என்னும் ஸ்லோகமாக இருக்கும்.
சவுந்தர்ய லஹரி "ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா' என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை
வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள்,
சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ
வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம்
சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு
முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
No comments:
Post a Comment