Tuesday, May 27, 2014

தர்பை புல் ..

தர்பை புல் ..இது உலகம் தோன்றிய முதல் இருப்பதாக கூறுகிறார்கள் .இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது.
நமது திருக்கோவில் களில் திருவிழா கோடி ஏற்றம் .இந்த தர்ப்பை புல்லை கொடி மரத்தை சுற்றி அடுக்கி கட்டி நீண்ட துணியால் கொடியன் மேல் வரை கட்டுவார்கள் .
திருகோவிலில் இருக்கும் பிரபஞ்ச சக்தி ஒருங்கிணைந்து கோடி மரத்தை சுற்றி இருக்கும் இது சிதறாமல் அங்கு சென்று வழிபடும் பகதர்களுக்கு ...
...
உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்
இந்த கொடி மரம் **8..16..32..என்று கணுக்களால் ஆனதாக இருக்கும் நமது முதுகெலும்பு 32 கணுக்கள் கொடி மரத்தின் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிற போது கொடி மரத்தில் சுற்றி இருக்கும் தரப்பை புல் பிரபஞ்ச சக்தி ஈர்த்து வைத்திருக்கும் அது வீழ்ந்து வாங்கும் பக்தர்களின் முதுகெலும்பு வழியாக உடலில் பரவும் ..ஆகவேதான் கொடி மரத்தின் முன்னே தவிர வேறெங்கும் விழுந்து வணங்குதல் கூடாது என்றார்கள். .
எல்லா இடங்களிலும் தர்ப்பை வளராது.நன்கு கவனித்து பார்த்தல் மலை களின் ஓரங்களில் வளரும் சில இடங்களில் ஆற்றின் ஒர படுகைகளில் வளர்கிறது. அதுவும் தாமிரபரணி நதி கரை ஓரம்தான்
இதன் காரணம் மலை சார்ந்த இடங்களில் காந்த அலைகள் அதிகம் இருக்கும். அதை ஈர்த்து வெளி இடும் ஆற்றல் தர்ப்பைக்கு உண்டு .. ஆகவேதான் முன் காலத்தில் ரிஷிகள் மலைகளின் குகைகளில் தவம் இயற்ற சென்றார்கள் .. .
ஒரு விஷேட காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தரப்பை புல்லை போடுவார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .ஆகவே தர்பைய்ல் பவித்ரம் போடும் பொது பிரபஞ்ச சக்தி விரல் மூலம் மூளைக்கு செல்கிறது உடலில் பரவும்.
எந்த விதமான ஹோமம் யாகம் செய்தாலும் தர்ப்பை இல்லாமல் செய்வதில்லை ..
தேர் இழுத்தல் .பஞ்ச லோகத்தில் செய்த இறைவனின் படிமங்கள் கோவிலின் உள்ளே இருக்கும் அது பிரபஞ்ச சக்தி ஆற்றல் நிறைந்து இருக்கும் அந்த சிலைகளை (பெரும்பாலும் சந்திர சேகரர்.]தேரினில் வைத்து வீதி உலா வரும்போது அதில் உள்ள காந்த அலைகள் மக்கள் மீது படும்..
வழிபாடு செய்கிற மக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்

No comments:

Post a Comment