Tuesday, May 6, 2014

யோகம்

யோகம் - சில தெளிவுகள்

ஆசையெனும் பெருங்கடலில் சிக்கித் தவிப்பதுதான் மனித வாழ்வென ஆகிவிட்ட சூழ்நிலையில், அத்தகைய மனிதர்களை மீட்டெடுக்க மனித குலத்திற்கு கிடைத்த அரும்பெரும் கொடைதான் யோகம்.

"யோகா" என்கிற வடமொழிச் சொல்லுக்கு, ஒருவரின் எண்ணங்கள...ையும் , சிந்தனைகளையும் ஒருமுகப் படுத்தி அதனை செயல்படுத்துவது என்பதாக பொருள் சொல்லப் படுகிறது. இதனையே மனிதனாகிய ஜீவாத்மா, இறை நிலையான பரமாத்மாவோடு இணையும் செயல் என ஆன்மீக விளக்கமாகவும் கூறுகின்றனர்.

யோகத்தில் என்னதான் நடக்கிறது?

தூய்மையான எண்ணம், செயல், சிந்தனையுடன் உயர்வான இறை நிலையினை தியானித்து எமது உடம்பிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மனதை ஒருமுகமாக்கி, அதன் ஆற்றலை உயர்வான இறை நிலையோடு இனைத்துக் கொள்வதுதான் யோகாமுலம் நிறைவேறுகிறது.

யோக மார்க்கத்தில் ஈடுபடுவோரை யோகி என்கின்றனர். யோகி எனப் படுபவர் இனப துன்பங்களுக்கும், பந்த பாசங்களுக்கும், புகழ்ச்சிகளுக்கும், தூற்றுதல்களுக்கும் அப்பாற்பட்டவராக இருப்பர்.

எல்லா வினைகளுக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. இது மனிதனுக்கும் பொருந்தும், தான் செய்யும் ஒவ்வொரு செயலின் எதிர்வினையை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாத போது, நிலை தடுமாறி சீர்குலைந்து துன்ப சகதியில் வீழ்ந்து அல்லல் படுகிறான்.

இத்தகைய துன்பங்களில் இருந்து தன்னை விடுவித்து பற்றற்ற நிலையை உருவாக்கி தருவதே யோகம் ஆகும். இப்படி விடுபட்டோரே யோகியாவர்.

ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் யோகமார்க்கத்தில் ஈடு பட்டு இறை நிலையினை அடையலாம். இதற்கு சாதி, மத, சமுதாய தடைகள் என எதுவும் கிடையாது. எனினும், யோகமார்க்கத்தில் வெற்றி அடைய சில நியதிகள் உள்ளன அவற்றை முறையாக கடைப்பிடிப்பவர்கள் குறுகிய காலத்திலேயே யோக மார்க்கத்தில் வெற்றியடையலாம்.
Mehr anzeigen

No comments:

Post a Comment