Thursday, May 29, 2014

வாழ்க்கைமுறை.

வாழ்க்கைமுறை.
அந்த வயதான மனிதர் மரணபடுக்கையில் இருந்தார். சுயநினைவு அவ்வப்போது திரும்பி நழுவிக்கொண்டு இருந்தது. நினைவு திரும்பிய ஒருதருணத்தில் கேட்டார்.
"என் மூ...த்தமகன் ராமு எங்கே..?"
"இங்கே இருக்கிறேன் அப்பா..!" என்றான் ராமு.
சிறிது நேரம் கழித்து மறுபடியும். நினைவு திரும்பியபோது கேட்டார்.
"என் இரண்டாவது மகன் சோமு எங்கே..?"
"அப்பா.., இதோ இங்கேதான் இருக்கிறேன்..!"
மறுபடி நினைவு திரும்பயபோது பெரியவர் குரல் சன்னமாக..,
"என் மூன்றாவது மகன் பீமு..?"
"அப்பா.. நானும் இங்கேதான் உங்கள் பக்கத்தில் இருக்கிறேன்..!"
பெரியவர் விழிகள் படக்கென்று திறந்தன.. "முட்டாள்களா.., எல்லோரும் இங்கே இருந்தால்.. யாரடா கடையைப் பார்த்து கொள்வார்கள்..?"என்றார்.
இதுபோல் வாழ்கை முறையில் சிக்கிகொண்டவர்கள்.., வாழ்கையின் சந்தோசங்களை மரணம்வரை தொலைத்தவர்களே

No comments:

Post a Comment