Saturday, May 24, 2014

விசார சருமன்

விசார சருமன்

ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்பார்கள் பெரியோர்கள். அதை நிஜமென்று உணர்ந்து வருந்திக்கொண்டிருந்தான் எச்சதத்தன். இல்லாவிட்டால், மாடு கன்றுகளை விரட்டும் சிறு குச்சி, கோடரியாக மாறுமா? காலைத்தான் துண்டிக்குமா? ஆராயாமல் அவசரப்பட்டு ச...ெய்யும் தவறுகள், ஆபத்தை வரவழைக்கின்றன என்பதை புரிந்துகொண்டிருந்தான். காரணம், அவன் செய்த செயலும், அதன் விளைவும்! மாடு மேய்க்கச் சென்ற மகன் விசார சருமன், மணலைப் பிடித்து லிங்கமாக்கி பூஜித்ததில் பிழையில்லை. அந்த மணல் லிங்கத்தில், பசுக்கள் பாலை பொழிகின்றன.

பாலை எப்படி மண்ணில் ஊற்றி வீணடிப்பது? அந்தப் பால், மேய்ச்சலுக்கு மாடுகளை அனுப்புபவர்களுக்கு சேர வேண்டியதல்லவா? அதை எப்படி வீணாக்கலாம். என்கிற தார்மிகக் கோபம்தான். அவனை அப்படி செயல்படத் தூண்டியது. இல்லாவிட்டால், மகன் பிடித்து வைத்த மணல் லிங்கத்தை. காலால் எத்த முற்பட்டிருக்கமாட்டான். எச்சதத்தனும் பக்தன்தான். அவன் பக்தி லவுகிகமானது. ஆனால் விசாரசருமனின் பக்தி, ஆத்மார்த்தமானது. அதனால்தான் மணலைப் பிடித்து வைத்தபோதும், அதற்குள் சிவத்தை உணரவும், அனுபவிக்கவும் அவனால் முடிந்தது.

அதைப் புரிந்துகொள்ளாத எச்சதத்தனுக்கு, மகன் பிடித்து வைத்தது மணலாகவே தோன்றியது. அதன் காரணத்தாலேயே, மண் என்று நினைத்து, கோபத்தில் அந்த மணல் லிஙக்த்தை எத்திவிட்டான். அந்த விளைவுதான், தியானம் கலைந்த விசாரசருமன், குச்சியை எடுத்து வீசியதும், அது கோடரியாக மாறி காலைத் துண்டித்ததும்! விசாரசருமனின் பக்தியை மெச்சி, தேவியுடன் காட்சியளித்த பெருமான், தன் கணங்களின் தலைவராக்கினார், ஆலயம் தோறும், சண்டிகேஸ்வரராக சன்னிதி கொண்டிருக்கும் இவரை வழிபட்டால்தான் சிவாலய வழிபாடு நிறைவுபெறும். மனத்திண்மையும் ஆன்ம பலமும் பெற இவரை வழிபடுவது சிறப்பு.
Mehr anzeigen

No comments:

Post a Comment