பிராஹ்மணீயம் - பிராஹ்மணன் யார்?
(சர்மா சாஸ்த்ரிகளின் "வேதமும் பன்பாடும்” புத்தகத்தில் இருந்து):
மஹாபாரதத்தில் 18 பர்வங்களில் ஆஸ்வமேதிக பர்வம் என்று ஒரு பர்வம். இதில் (96, 97வது அத்தியாயத்தில் யுதிஷ்டிரர்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நோக்கி “பிராஹ்மணீயத்தை” பற்றி சில கேள்விகளை கேட்கிறார்.:
யுதிஷ்டிரர்:
கேசவா, ஜனார்த்தனா,
பிராஹ்மணன் யார், அவனது தன்மை யாது?
பகவான்:
தர்மத்தை அனுஷ்டிப்பவருள் சிறந்தவரே, யுதிஷ்டிரரே, கேளும்:
* சிகையும், யஜ்னோபவீதமுள்ளவர்களும்,
* ஹோமம் செய்பவர்களும்,
* தன் மனைவியிடத்திலேயே ஆசையுள்ளவர்களும்
* நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேதம் ஓதுபவர்களும்,
*ஸந்த்யாவந்தனம் மூலம் காயத்ரியை உபாஸிப்
பவர்களும்,
* அதிதி தர்மத்தை அனுஷ்டிப்பவர்களும்,
* பித்ரு கார்யத்தில் சிரத்தையுடையவர்களையும் பிராஹ்மணன் என்று கூறலாம்.
-===
அரசரே, பாண்டவரே, மேலும் சில விஷயங்களை கூறுகின்றேன். கேளும்:
* பிராஹ்மண குலத்தில் பிறந்தும் மேதாவிகளாகயிருந்தும் தேவபூஜை செய்யாதவர்கள்,
* பேராசையுள்ளவர்கள்,
* தன் மனைவியிடத்தில் ஆசை வைக்காதவர்கள்,
* சமையலில் வேற்றுமை செய்பவர்கள்.
* தகப்பனாரையும், தாயாரையும், குருவையும் அவமதிப்பவர்கள்,
* ஸந்தியோபாஸ்தி செய்யாதவர்கள்.
* ஸ்வாஹையற்றவன்,
* ஸ்வதையற்றவன்,
* மாமனார், மாமியாரை அனுசரிக்காதவன்,
* வட்டியில் ஸம்பாதிப்பவன்,
*பொய் வேஷம் பூண்டவன்,
* ஆசாரமில்லாதவன்
இவர்களின் வாழ்க்கை வீணானவை என்று தெரிந்துகொள்ளும்.
No comments:
Post a Comment