நாரதர் ஒருமுறை இந்திரனைக் காண தேவலோகம் சென்றார். அங்கு இந்திர சபை காலியாக
கிடந்தது. தேவர்கள் யாரும் தென்படவில்லை. எங்கோ ஒரு மூலையில் ஒரு முனிவர் மட்டும்
தவத்தில் மூழ்கிக் கிடப்பதை கண்டார். அந்த முனிவரிடம், தேவர்கள் ஒருவரையும்
காணவில்லையே என விசாரித்தார். பூலோகத்திலுள்ள ஆயர்பாடியில் போய்ப்பாரும்' என்று
பதிலளித்து விட்டு கண்களை மூடிக்கொண்டார் முனிவர். நாரதரும் ஆயர்பாடி சென்றார்.
அங்கு நிகழ்ந்த அதிசயம் கண்டு மகிழ்ந்தார்.
கோடி ஆண்டுகள் தவம் செய்தாலும் காண முடியாத கடவுளான மகாவிஷ்ணு, குழந்தை கண்ணனாக, தன் பிஞ்சுக் கரங்களால் தாய் யசோதையை அணைத்தபடி அருகில் படுத்திருந்தான். இந்த தெய்வீக காட்சியைக் காண இந்திரலோகமே அங்கு திரண்டு வந்தது தெரிய வந்தது. நாரத மகரிஷியும் அந்தக் காட்சி கண்டு மகிழ்ந்தார். "என்ன புண்ணியம் செய்தனை யசோதா' என்று நாரதர் உள்ளிட்ட அனைவரும் அந்த அம்மாவை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment