எல்லாம் அவன் செயல்.....
மகாபாரதத்தில் ஒரு நாள்....
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் யுத்தம் நடக்கிறது. போரில் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரும் வீர மரணம் எய்துகின்றனர். கௌரவர்கள் தரப்பில் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பலர் சாய்ந்தனர். இறுதியாக கௌரவர்களின் சுயநலகாரன் துரியோதனன். பதினெட்டு நாள் பாரதப் போர் முடிவுக்கு வந்திருந்தது.பீமனால் தொடைகள் பிளக்கப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தான் துரியோதனன். தரையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல், குமுறும் கோபத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு, இரண்டு கைகளாலும் பூமியை அடித்துக் கொண்டு புழுதியில் புரண்டு கொண்டிருந்தான். மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய உடலைத் தின்பதற்காக, கழுகுகளும் நரிகளும் அங்கே சூழ்ந்திருந்தன. காத்துக்கொண்டிருந்தன.
துரோணரின் மகனும் துரியோதனின் நண்பனுமான அஸ்வத்தாமன், அங்கே ஓடோடி வந்தான். உயிர் போகமால் மரண வலியுடன் துடிதுடித்துக் கொண்டிருந்த துரியோதனனை கண்டான். அவனிருந்த நிலையைக் காணசகிக்காமல் கண்ணீர்விட்டுக் கதறி அழுதான். கோபத்தினால் சிவந்த விழிகளுடன் ஆக்ரோஷ்மமாக சொன்னான்: 'துரியோதனா! எனது தந்தை துரோணர் கொடூரமாகக் கொல்லப்பட்ட போதுகூட நான் இத்தனை வேதனை அடையவில்லை. ஆனால் உன்னை இந்த சூழலில் பார்க்கும்போது, மனம் எரிமலையாகக் கொதிக்கிறது. சத்தியமாக சொல்கிறேன். எதிரியின் கூட்டத்தில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமால் அனைவரையும் இன்றிரவே தீர்த்துவிடுகிறேன் என்று சபதமெடுத்துக் கிளம்பினான்.
போர் முடிந்தபின், வந்திருப்பவர்கள் பாண்டவர்கள் என்று தெரியாமல் காந்தாரியும், திருதாரஷ்டரும் இறுதியில் கேட்கிறார்கள் எனது பிள்ளைகள் ஜெயித்தார்களா! என்று, தர்மன் முன் சென்று போரைப்பற்றி சொல்லும் போது கிருஷணர் நீ நில் நான் சொல்கிறேன் என்று. காந்தரியிடம் பார்த்தாயா உனது பிள்ளைகள் கௌரவர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர். உனது பிரியமான பிள்ளையான துரியோதனன் தொடைகள் பிளக்கப்பட்டு இறந்துக்கிடகிறான் என்று ஆக்ரோஷமாக கிருஷணர் சொன்னார். இதானால் கோபமடைந்த காந்தாரி. ஹேய் கிருஷ்ணா ... இந்த போர் அனைத்துக்கும் நீதான் காரணம்(பாவம் இப்போதுதான் தெரிந்துருக்கிறது அவளுக்கு) என்று கூறி உனது குலம் அழிந்து போகும் என்று சாபம்விட்டாள்.
நடப்பவை அனைத்தும் இறைவனின்(கிருஷ்ணனின்) லீலை என்று நாம் உணர்ந்து நமது செயல் அனைத்தும் அவனுக்கு அர்ப்பணம் செய்வோம்
No comments:
Post a Comment