Tuesday, June 17, 2014

ராமனின் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய கைகேயித்தாய்!

இதனை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீர் வருவது உறுதி)

ராமனின் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய கைகேயித்தாய்!

ராம காவியத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரம் கைகேயி. கைகேயினால்தான்ராமாயணம் என்னும் அமிர்தம் நமக்குக் கிடைத்துள்ளது. ராமகதையைக் கேட்கும்அனைவரும் கைகேயியைத் தவறாக எண்ணுவர். ஆனால் ராமபிரானிடம் கைகேயி எல்லைஇல்லாத அன்பு வைத்திருந்தாள். எல்லாவற்றிற் கும் மேலாக ராமன் தாரகபிரம்மம் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள். கூனி வந்த சில மணித்துளிகளில்தான் கைகேயியின் மனதில் ஞானம் விலகி மாயை வந்து புகுந்துகொண்டது. கூனி கைகேயியைச் சந்திப்பதற்கு முன்பு ராமன் வேதபுருஷன், தாரகபிரம்மம் என்ற ஞானம் அவளிடம் இருந்தது. இதை கம்பர் சொல்லும்போது, 

"விராவு அரும் புவிக்கு எலாம் வேதமே என

ராமனை பயந்து எற்கு இடர் உண்டோ'

என்கிறார். 

கூனியிடம் விவாதிக்கும் அந்த ஒருசில நிமிடங்களில் ஞானம் மறைந்து விட்டது. ஆனால் மறுபடியும் அந்த ஞானம் நினைவிற்கு வந்தது.

ராமனை வனத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்து, நாட்டை ராமனிடமேகொடுத்துவிட வேண்டும் என்று பரதன் தீர்மானம் செய்துவிட்டான். அயோத்தி நகரமக்கள் அனைவரும் புறப்பட்டார்கள். வசிஷ்ட முனிக்கு தசரத மாமன்னனின்அந்திமக் கருமங்களை ராமனைக் கொண்டு செய்து முடித்துவிட வேண்டும் என்றஎண்ணம். கோசலையும் சுமித்திரையும் பிரிந்த பிள்ளை களைப் பார்க்க வேண்டும்என்ற ஆவலில் செல்கிறார்கள்.

இந்த சமயத்தில் கைகேயியும் கிளம்புகிறாள். கைகேயி எதற்காகப் புறப்பட்டாள்என்று ஆராயும்போது ஒரு உண்மை புலனாகிறது. ஸ்ரீமத் அத்யாத்மக ராமாயணத்தில்இதற்கு அழகான விளக்கம் உள்ளது.

ஞானியாக இருந்த கைகேயியின் மனதில் சில விநாடிகளில் மாயை புகுந்து விட்டது.மறுபடியும் ஞானம் வந்து விட்டது. ஞானம் நிலைத்திருக்க வேண்டும்.சஞ்சலத்தால் ஞானத்தை இழக்கக் கூடாது. தசரதர் சத்யசந்தர். அவர் கொடுத்தவாக்கு சத்தியமாகவே இருக்கும். ராமனோ தர்மாத்மா. ராமன் பதினான்கு வருடவனவாசம் பூர்த்தி யாகாமல் நாடு திரும்ப மாட்டான் என்று நன்றாகஅறிந்திருந்தாள் கைகேயி. தன்னுடைய விபரீத புத்தியினால் ராஜ்யத்திற்குநேர்ந்த அவல நிலையை அறிந்து தவித்தாள்.

நாட்டிற்கு முதலில் ராஜ்யலக்ஷ்மி வேண்டுமே என்று பரதனிடம் நாட்டைஏற்றுக்கொள்ளும் படி வேண்டினாள். பரதன் ராமனுடைய தம்பியாயிற்றே. அவன்மட்டும் முறை தவறி நடந்து கொள்வானா? இவை அனைத்தையும் நன்றாகஅறிந்திருந்தாள் கைகேயி.

கைகேயி ஒரு உயர்ந்த நோக்கத்துடனேயே காட்டிற்குப் புறப்பட்டாள் என்றுஸ்ரீமத் அத்யாத்மக ராமாயணம் விரிவாகச் சொல்கிறது. கைகேயி தான் செய்தபாவத்திற்குப் பிராயச் சித்தம் செய்து கொள்ளவே காட்டிற்குப் புறப்பட்டாள். அந்த தாரக பிரம்மமாகிய ஸ்ரீராமனி டம் சரணடைந்துவிட வேண்டும் என்றஞானம் தோன்றியது. சகல பாவங்களும் எப்போது நீங்கும்? மனம் வருந்தி தாரகபிரம்மமாகிய ராமபிரானிடத்தில் சரண் அடைந்தால் நீங்கி விடுகிறது. அதற்குத்தன்னையே உதாரணமாக எடுத்துக் கொண்டு உலக மக்கள் உய்ய வேண்டும் என்றஆர்வமும் அவளுக்கு!

ராமா, ராமா என்று தவிக்கிறாள். ராமனு டைய பாதாரவிந்தங்களில் விழுந்து கதறினால் தான் தன் பாவம் போகும் என்று உருகுகிறாள் கைகேயி.

ராம, பரத சமாகமம் ஆயிற்று. பரதனுடைய சாமர்த்தியம் எல்லாம் ராமனிடம் பலன்அளிக்கவில்லை. ராமனுடைய பாதுகைகளைப் பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்த பரதன்எல்லாருடனும் நாடு திரும்ப ஏற்பாடுகளைச் செய்கிறான்.

இந்த சமயத்தில் ஏகாந்தமாக ராமனைத் தரிசனம் செய்யத் துடிக்கிறாள் கைகேயி.அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. கண்களில் நீர் ததும்ப கைகேயித் தாய் ராமன்அருகில் வந்து கூப்பிய கைகளுடன், ""ராமா! மாயையினால் என் மனது மதியிழந்து,ஒரு கண நேரத்தில் உன்னுடைய பட்டாபிஷேகத்திற்குத் தடை ஏற்படுத்தி விட்டேன்.நீ யாரையும் மன்னிக்கும் இயல்புடையவன். என்னையும் மன்னிக்க வேண்டும்.

ஒரு தாய் தன் மகனிடம் மன்னிப்பு கேட்பதா என்று நினைக்க வேண்டாம். உன்னுடைய உண்மையான ஸ்வரூப ஞானம் எனக்குப் புரிந்து விட்டது. நீ அவ்யக்தமானபரப்பிரம்மம். மானுட ரூபம் எடுத்துக்கொண்டு உலகை மோகிக்கச் செய்கிறாய்.ஜீவர் களின் சுக- துக்கங் கள் உன் எண்ணப் படி நிறைவேறு கின்றன. நீயேசூத்ரதாரியாக இருந்து கொண்டு இந்த உலக நாடகத்தை நடத்துகிறாய். தேவ காரியம்சாதிப்பதற் காக நீயே என்னை மாயையில் ஆழ்த்தி இந்த பாப காரியத்தைச்செய்யும்படி ஏவியிருக் கிறாய்.

நீ தாரக பிரம்மம். உனக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். உன்னையே சரணடைந்தேன்.உன்னுடைய உண்மை வடிவத்தை உணர்த்தி, உபதேசித்து, தத்துவ ஞானம் என்றபவித்ரமான வாளால் என் சம்சார பந்தங்களை அறுத்தெறிய வேண்டும்.

உலகமே என்னைத் தூற்றுகிறது. அதைப் பற்றி நான் நினைக்கவில்லை. உன்னுடையஅருள் ஒன்று இருந்தால் போதும்!'' என்று ராமனிடத்தில் மனப்பூர்வமாக-பரிபூரணமாக சரணாகதி அடைந்தாள். இப்படி ஒரு உயர்ந்த செயலை கைகேயித் தாய்செய்தாள்.

தன்னை சரணம் அடைந்தவர்களுக்கு அருள்புரிவதுதான் தனது விரதம் என்று சங்கல் பம் உடைய பகவான் சும்மா இருப்பானா? கைகேயித் தாய்க்கு அபயம் அளிக்கிறார்.

""தாயே! தாங்கள் சொல்லிய அனைத்தும் உண்மையே. தாங்கள் எந்தக் குற்றமும்செய்ய வில்லை. எனது அவதார நோக்கம் ராவண வதமாகும். அந்த தேவ காரியம்நிறைவேறுதல் பொருட்டு எனது ஆக்ஞையினால் சரஸ்வதி தேவி தங்கள் வாக்கில்புகுந்து என் காரியத்தை நிறைவேற்றி முடித்தாள். தாங்கள் அபவாதம் செய்தவர்என்ற எண்ணமும் எனக்கு இல்லை.

நான் சர்வத்ர சமதர்சி. நண்பன்- விரோதி என்னும் பாகுபாடு என்னிடம் இல்லை''என்று கைகேயிக்கு அனுக்ரஹம் செய்து தாரக பிரம்ம மாகிய ஸ்வரூபத்தை உணர்த்திஅருளினார்.

கைகேயித் தாயும் தாரக பிரம்ம தரிசனத் தைப் பெற்று, அநேக நமஸ்காரங்களைச்செய்து, ஆனந்தம் அடைந்து எல்லாருடனும் பயண மானாள். அத்யாத்மக ராமாயணத்தில்இந்தச் சம்பவம் விளக்கப்பட்டுள்ளது.

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்

துறக்க நல் அருளும் துறந்தனள் தூமொழி மடமான்

இரக்கமின்மையன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன்

பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றனவே'

என்கிறார் கம்பர். அதாவது, கைகேயியின் இரக்கமின்மையால்தான் ராமாயணம் என்ற அமிர்தம் கிடைத்துள்ளது என்று போற்றுகிறார். தாரக பிரம்ம தரிசனம் பெற்ற கைகேயித் தாய் உயர்ந்தவளே!

No comments:

Post a Comment