தச வாய்வு விளக்கம் :
1 . பிராணன் - மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்படி செய்யும்
2 . அபானன் - குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி , உண்ட அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்
3 . வியானன் - சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும் தவனமும் உண்டாகசெய்யும்
4 . சமானன் - சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்
5 . உதானன் - கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய , பேசக்கூடிய காரியத்தை செய்யும்
6 . நாகன் - வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்
7 . கூர்மன் - கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்
8 . கிரிதரன் - மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்
9 . தேவதத்தன் - மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல் உண்டாக்கும்
10 . தனஞ்செயன் - பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி வெடித்து போவது , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்,
No comments:
Post a Comment