சடங்குகள் எவ்வளவு
அவசியம்?
நெல்லிலிருக்கும் அரிசிதான் அதை முளைக்கச் செய்வதற்கு அவசியமானதென்பதும்,
அதன் மேலிருக்கும் உமி பயனற்றதென்பதும் சாதாராணமான கருத்து. இருப்பினும், உமி நீங்கிய
அந்த அரிசியை விதைத்தால், அது முளைத்துப் பயிராகி நெல் விளைவதில்லை. நெல் விளைய வேண்டுமானால்
உமியுடன் கூடிய தானியத்தை அப்படியே விதைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு அரிசி வேண்டும்போது
நெல்லிலிருந்து உமியைப் பிரித்து நீக்க வேண்டும். அது போல ஒரு தர்மம் நிலைத்து வளர்வதற்குக்
கிரியைகளும் சடங்குகளும் அவசியம். முளைக்கும் வித்தாகிய உண்மையை அவை தம்முள் பொதிந்து
வைத்திருக்கின்றன. ஆதலால், ஒவ்வொரு மனிதனும் அவற்றுள் அடங்கியிருக்கும் உண்மையை (தத்துவப்
பொருளை) அடையும் வரையில் அவைகளைச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்
No comments:
Post a Comment