ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.
ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும்.
இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்) பிராத ஸங்கல மத்தியான்ன அபரான்ன சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஒரு திதியானது சாயன்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால், மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும். ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது, அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும். அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும். சங்கரம தோஷமும் இருக்கக் கூடாது.
மேற்கண்டவாறு முந்தின மாத திதி அமையவில்லையெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக்கலாம். ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்

No comments:
Post a Comment