Saturday, July 26, 2014

ஏன் இந்த நம்பிக்கை -கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஏன் இந்த நம்பிக்கை -கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)
“தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பல வீனம் இருக்கும் வரையும், அந்த பலவீ னத்திலே மனிதனுடைய இதயத் திலிருந்து அழு குரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந் தே தீரும்” என்கிறார் சுவாமி விவே கானந்தர். ஆம், பலவீ னத்திலும் பயத்தி லுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்ற மளிக் கிறது. இந்து சமயம ன்றிப் பிற சமயங்களும் இந்த உண் மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்க ளுக்குமுன் ஒரு திரைப் படத்தில் கேட்ட தாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாண வியைப் பார்த்துக் கேட்கிறார்:
“கடவுள் எங்கே இருக்கிறார்?”
மாணவி சொல்லுகிறாள்:
“தூணிலும் இருக்கிறார், துரும் பிலும் இருக்கிறார்.”
“இல்லை; அது பழங்கதை. வாழ் க்கை நன்றாக இருக்கும் போது கடவுள் இல்லை; வறுமை வரும் போது அவர் உடனே வருகிறார். வெற்றி பெற்றவனுக்குக் கடவுள் இல்லை; தோல்வியுற்றவன் நெஞ்சில் உடனே தோற்றம ளிக் கிறார்” என்றார் ஆசிரியர். ஆம்; பாவம் செய்யும்போது கடவுள் இல்லை. அதற்குரிய தண்ட னையை அனுபவிக்கும் போது கட வுள் இருக்கிறார். ஒலியிலே தோ ன்றாத கடவுள், எதிரொலியில் தோன்றுகி றார். சிலையிலே காணமுடியாத தெய் வம், சிந்தை யிலே சாட்சிக்கு வரு கிறது.
`கடவுள் நம்பிக்கை என்பது ஏதாவ தொரு வடிவத்தில் எல்லோருக்கும் இருந்தே தீருகிறது’ என்பது இந்துக்கள் முடிவு. `உயர்ந்தனவோ தாழ்ந்தனவோ அனைத்திலுமே நான் இருக்கி றேன்’ என்றே கண்ணன் சொல்கிறான்.
அர்ஜுனனிடம் கண்ணன் சொல் கிறான்:
“அர்ஜுனா, தேவர் கூட்ட ங்களும், முனிவர்
களும் என் உற்பத்தியை உணர மாட்டார்கள்; ஏனென் றால், அவர் களுக்கு முற்றி லும் முதற்காரணம் நானே. ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகிற்குக் தலைவன் என்றும், என்னை அறிகிறவன் மனிதர்களுள் மயக்க மில்லாதவன். புத்தி, ஞானம், தெளிவு, பொறுமை, சத்தியம், அடக் கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சா மை, அஹிம்சை, மனத்தின் நடுநி லை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி அனைத்துமே என்னிடத் திலிருந்தே உண்டாகின்றன. வேத ங்களுள் நான் சாம வேதம்; தேவர் களுள் இந்திரன்; இந்திரி யங்களுள் நான் மனது; உயிர்களில் நான் உணர்வு. புரோகி தர்களுள் நான் பிரகஸ்பதி; சேனாதிபதிகளில் நானே தேவசே னாதிபதியாகிய முரு கன்; நீர் நிலைகளில் நான் கடல். ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் காம தேனு; தம்ப திகள் நடுவே நான் மன்மதன்; பாம்புகளில் நான் வாசுகி. நாகங்களில் நான் அனந்தன்; மழைத் தேவதைகளில் வருணன்; அடக்கியாள்வோர்களில் நான் எமன். விலங்குகளில் நான்
எமன்
எமன்
சிங்கம்; பறவைகளில் நான் கருடன். தூய்மை தருவனவற்றுள் நான் காற்று; ஆயுதம் ஏந்தியவ ர்களில் நான் ராமன்; மீன்களிலே நானே மகர மீன்; நதிகளில் நானே கங்கை. அர்ஜுனா! சிருஷ்டிப் பொரு ளுக்கு முதல், இடை, கடையாகிய மூன்றும் நானே. வித்தைகளில் நானே ஆத்ம வித்தை. வாதம் செய் பவர்களிடம் நானே வாதம். பெண் மையில் நானே புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறு மை. காலங்களில் நானே வசந்தம்; மாதங்களில் நானே மார்கழி; தருக் களில் நானே தேவதாரு. வாசகர் களின் சூதாட்டம் நானே; அழகும், மனத் தெளிவும், செயலாற்றும் வன் மையும் சேர்ந்தவர்களிடத்தில் அனை த்தும் நானே!
தண்டிப்பவர்களிடத்தில் நானே செங்கோல் ஆகிறேன்; வெற்றி வேண்டுவோரிடத்தில் நானே நீதி. ரகசியங்களில் நானே மவுனம்; ஞானிகளுடைய ஞானமும் நானே. அர்ஜுனா அனைத்துக்கும் வித்து எதுவோ அது நானே”.
இது கண்ணனின் திருவாய் மொழி. எல்லாம் நானே என்று சொல் ல வந்த பரந்தாமன், எவை எவை உயர்ந்தவையோ, எவை எவை பிரச்சி னைக்குரியவையோ, அவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த அகில த்தில் தான் யார் என்பதை விளங்க வைக்கிறான். ஸ்தூலமாகக் காட்சி தரும் அழகிய கண்ணன் நிலை, இவை அனைத்தையுமே உள்ளடக்கியது. தெளிவு, மயக் கம் இரண்டி லுமே திரண்டு நிற்கும் அந்த இறைவனைக் கர்மத் தைவிட ஞானமே அதிகமாக அறி கிறது. கர்மத்தின் விளைவாக வரும் ஞானம், அதைவிட விரைவாகப் புரிந்து கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியும் உலகத்தைவிட கண்ணுக்குத் தெரியாத சூட் சம உலகம் பல மடங்கு பெரிதாக இருக்கிறது. அவை அனைத் தையும் இயக்கும் மூலப் பொருளை அனுபவம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறது. கடவுள் நம்பிக் கையல்ல. விஞ்ஞானிகூட விளக்கம் சொல்ல முடியாத ரகசியம் இறை வனின் சிருஷ்டியில் இருக்கிறது. உலகத்தில் இருநூறு கோடி மனிதர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இருநூறு கோடியிலும் ஒருவரே போல் காட்சியளிக்கும் இன்னொருவர் இல்லை. ஒருவரு க்கொருவர் பத்துக்கு ஒன்பது ஒற்றுமை இருந் தால், ஒன் றாவது மாறுபட்டு நிற்கும். நூற்றுக்கு நூறு உடல மைப்பும், குரலமைப்பும் உள்ள இருவரை நீங்கள் காணமுடியாது. இரட் டைப் பிள்ளைகளாகப் பிறப் பவ ரிடையே கூட ஏதாவ தொரு வித்தியாசத்தைக் காண முடியும். குணங்களிலும் ஒரு வரு க்கொருவர் கொஞ்சமா வது மாறுதல் இருந்தே தீரும்.
என் தந்தை குடிக்க மாட்டார்; வேறு பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்; ஆனால் சீட்டா டுவார்.
நானோ, சீட்டு மட்டும் ஆடமாட்டேன். ஆகவே, இருநூறு கோடி க்கும் தனி த்தனி `டிசைன்’ செய்தவன் இறை வன். இது மனித னால் ஆகக் கூடியதா?
மனித முயற்சியால் நடக்கக் கூடியதா?
உலகமெங்கும் நீதித் துறையினர் குற்றவாளிகளின் கைரேகை
களைப் பதிவு செய்கிறார்களே, ஏன்?
ஒருவனின் கைரேகை போல் இன்னொருவனின் ரேகை இருக்காது என்பது ஒரு நம்பிக்கையாகும். விஞ்ஞா னமும் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. இருநூறு கோடி கைகளுக்கும் தனித் தனி `டிசைன்’ போட்டிருக்கிறான் இறைவன். படிப்பறிவில் லாதவர்களைக் கைரே கை வைக்கச் சொல்வதற்குக் காரணம் இதுதான். குறுக்கெழுத்துப் போட்டியில், ஒரு எழுத்தை மாற்றி னால் ஓரு கூப்பன் அதிகமாவது போல், ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொரு ரேகை யை மாற்றுகிறான் இறைவன். வியக்கத்தக்க அவனது சிருஷ் டியிலேயே அவனைக் கண்டு கொள்ள முடிகிறது.
அப்படியும் கண்டு கொள்ளா தவர்கள், தங்கள் பலவீனத்தால் ஏற்பட்ட துன்ப அனுபவ ங்களிலே கண்டு கொள்ளு கிறார்கள்.
விஞ்ஞான ரீதியாக இன்று சொல்லப்படும் உண்மைகளை இந்து மதம் எப்போதோ சொல்லி விட்டது. இந்து மதத்தின் தனிச்சிறப்பு அதுதான். சிலை வழிபாட்டு நிலையையும் அது ஒப்புக் கொண் டிருக் கிறது. அதற்கு அப்பாற்பட்டு மனத்துள்ளே கடவு ளைக் காணும் நிலையையும் `மேல்நிலை’ என்று கூறுகிறது. சிலையை வெறும் கல் என்று சொல்லும் நாஸ்திகனுக்கும், மனம் என்னும் ஒன்று இருக்கிறது. அது மரணப்படுக்கையிலாவது கடவு ளைப் பற்றிப் பேச வைக்கிறது. பிறப்புக்குத் தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே. இவ்வ ளவு எலும்புகளும், நரம்புகளும் ரேகைகளும் எங்கிருந்து வந்தன?
மண்டையோட்டை அறுத்துப் பார்த்தால் உள்ளே ரோமம் இல்லை. இந்த ரோமம் வளர்வது எப்படி?
நாம் வளர்வது எப்படி?
குழந்தைப் பருவத்தில் விழு ந்த பல் முளைப்பது எப்படி?
ஒன்பது ஓட்டைகள் இருந் தும் உள்ளே இருக்கும் காற்று உலாவிக் கொ ண்டே இருப்பது எப்படி?
இவை அறிவு போடும் கேள்விகள். ஆனால் அனுபவம் காட்டும் உண்மைகள், இவற்றை விட அதிகமாகக் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. இறை வனின் அஸ்திவாரம் என்ன என்ப தனை முதலி லேயே கண்டு கொண்டவர்கள் இந்துக் கள்தான். இரக் கம், அன்பு, கருணையைக் காட் டிய பௌத்தமதம் கடவுள் ஒன் றைக் காட்டவில்லை. ஆனால், கடவுள் என்று ஒன் றைக் காட்டிய இந்து மதம் இரக்கம், அன்பு, கருணையை விட்டுவிடவில்லை. பௌத்த மதத்தை இந்து மதம் ஜீரணித்து விட்ட தற்குக் காரணம் இதுதான். வாழ்க்கையைக் `கர்ம காண்டம்’, `ஞான காண்டம்’ என்று பிரித்தது இந்து மதம் தான்.
கர்ம காண்டத்தின் தொழி ல்கள் காரணமாக ஜாதி உண்டு. ஞான காண்டத்தில் ஜாதி இல்லை; யாவரும் சந்நியாசி ஆகலாம். லௌ கீக வாழ்க்கையை யும், தெய்வ நம்பிக்கையையும் ஒன்றாக இணைத்தது இந்து மதம். உணவு, மருத்துவம், தொழில் அனைத்திலும் பாவ புண்ணிய ங்களைக் காட்டுவது இந்து மதம். உடல் இன்பத்தைக் ஒப்புக் கொண்டது இந்து மதம். அதற்கு மேற்பட்ட துறவு நிலையிலும் ஆதிக் கம் செலுத்துவது இந்து மதம். இன்ப ங்களு க்குச் சடங்குகள் செய்வது இந்து மதம். துன்பங்களுக்கு ஆறு தல் சொல்வது இந்து மதம். ஆகவேதான், எந்த நிலையிலும் ஒரு இந்துவுக்குக் கடவுள் நம்பிக்கை எழுந்துக்கொண்டே இருக் கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைக ளுக்குத் தப்ப முடியாது. `ஆஸ்தி’ என்றால் சொத்து. `நாஸ்தி’ என் றால் பூஜ்ஜியம். `நாஸ் திகன்’ ஒன்று மில்லாத சூனியம். இந்து வின் கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக் கிறான். ஆகவே, நாஸ்திகனும், இந்துவே; ஆஸ்திகனும் இந்து வே. இரண்டு பேரும் கடவுளைப் பற்றியே பேசு கிறார்கள்.

No comments:

Post a Comment