திதி அன்று ருதுவான பெண்களுக்கான பலன்கள்
----------------------------------------------------------------------
* பெண் பிரதமை திதியில் ருதுவானால், அவள் எத்தகைய முயற்சியையும் மிக எளிதாக செய்வாள்.
----------------------------------------------------------------------
* பெண் பிரதமை திதியில் ருதுவானால், அவள் எத்தகைய முயற்சியையும் மிக எளிதாக செய்வாள்.
* பெண் துவிதியை திதியில் ருதுவானால் அவள் அழகுமிக்கவள். சகலபாக்கியங்களும், சுகபோகங்களும் பெற்று வாழ்வாள்.
* பெண் திரிதியை திதியில் ருதுவானால் அவள் தன் கணவனிடத்தில் போகம் அனுபவிப்பவள். சந்தான விருத்தியுள்ளவள்.
* பெண் சதுர்த்தி திதியில் ருதுவானால், அவள் வாழ்வில் ஆசை கொள்வாள். அதனால் பகமையுள்ளம் படைத்தவள்.
* பெண் பஞ்சமி திதியில் ருதுவானால், அவள் வாழ்வில் எல்லா வகையிலும் துன்பமோ, நட்டமோ இன்றி, லாபமும், நன்மையும் அடைந்து, புத்திர பாக்கியத்தோடு பெருவாழ்வு வாழ்வாள்.
* பெண் சஷ்டி திதியில் ருதுவானால், அவள் சண்டைக்கு செல்பவள். உணவு உண்பதில் அதிக விருப்பம் உடையவள்.
* பெண் சப்தமி திதியில் ருதுவானால், அவள் புத்திர பாக்கியம் மட்டுமின்றி தனபாக்கியம் பெறும் பாக்கியம் உடையவள்.
* பெண் அஷ்டமி திதியில் ருதுவானால், அவள் மிகவும் துணிச்சல் உடையவள் என்பார்கள். எல்லோரும் `தைரியசாலி' என்று
* சொல்லும்படி நடந்து கொள்பவள்.
* பெண் நவமி திதியில் ருதுவானால், அவள் எப்போதும் அதிருப்திடையவளாகவே வாழ்வாள்.
* பெண் தசமி திதியில் ருதுவானால், அவள் தன்னை நாடி வந்து இரப்போர்க்கு `இல்லை' என்று சொல்லாமல் கொடுத்து உதவிகள் செய்வாள்.
* பெண் ஏகாதசி திதியில் ருதுவானால் அவள் வலிமையுடையவள். ஆரோக்கியம் மிக்கவள். நோயில்லாதவள், சுகமாக வாழ்பவள்.
* பெண் துவாசதி திதியில் ருதுவானால் அவள் அற்பகாரியத்திற்கெல்லாம் கோபம் கொள்ளும் முன் கோபக்காரியாக இருப்பாள்.
* பெண் திரியோதசி திதியில் ருதுவானால், அவள் நல்ல அழகுடையவள். தன் கணவன் வார்த்தைக்கு எதிர்வார்த்தை பேசாத உத்தமியாவாள்.
* பெண் சதுர்த்தசி திதியில் ருதுவானால் அவள் முடியாத காரியங்களை செய்ய விரும்புவாளாம்.
* பெண் பவுர்ணமி திதியில் ருதுவானால் அவள் எப்போதும் சுற்றுப் பயணம் செல்பவள். அடிக்கடி வம்பை விலைக்கு வாங்குவாள்.
* பெண் அமாவாசை திதியில் ருதுவானால் அவள் நீங்காத செல்வம் அடைவாள்.
No comments:
Post a Comment