பெண்கள் கவனத்திற்கு!
நமது சாஸ்திரம் பெண்களுக்குக் கூறும் சில முக்கியகுறிப்புகள் 1. கணவரோடு மனைவி இருக்கும் போது மல்லிகை, முல்லைப் பூக்களைத் தாம் சூட வேண்டும். கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற பூக்களைச் சூடக்கூடாது. பெண்கள் குளிக்கும் போது முகத்திற்கு அவசியம் மஞ்சள் பூச வேண்டும். 3. ஓவ்வொரு பெண்ணும் அவசியம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாய் கல் வாழை விசிறி போன்ற மூக்குத்தி அணிவது விசேஷ சக்தி வாய்ந்ததாகும். 4. ஒவ்வொரு பெண்ணும் காலில் பெருவிரலுக்கு அடுத்தவிரலில் வெள்ளியால் மெட்டி அணிய வேண்டும். 5. ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்கின் போது தலையில் பூ வைக்கக்கூடாது; சமையல் அறைக்குள் போகக்கூடாது; யாருக்கும் உணவு படைக்கவும் கூடாது. 6, திருமணம் ஆன பெண்கள் இரவு நேரத்தில் கருப்பு, இரத்த சிவப்பு, கடல் நீலம் ஆகிய நிறம் கொண்ட சேலைகளை உடுத்தக்கூடாது, வெளிறிய வண்ணம் கொண்ட சேலைகளையே உடுத்தவேண்டும். 7. திருமணம் ஆன பெண் ஓவ்வொரு நாளும் அதிகாலையில் குளித்துவிட்டுக் கணவன் தூங்கிக்கொண்டுரும் போதே, அவன் முகத்தருகில் முகத்தைக் கொண்டு சென்று இதோ பாருங்கள் என்று கூறி எழுப்பித் தன் முகத்தில் விழிக்கும்படி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment