கந்தம் (சந்தனம்)
ஆழ்ந்த பாவத்தையும்,அதிர்ஷ்ட்மின்மையையும் துயரத்தையும் அழித்து தர்ம ஜ்ஞானத்தை உண்டுபண்ணுவது இந்தச் சந்தனப் பூச்சு என்கிறது ‘ ‘குலார்ணவம்‘
வேறு வகை
எல்லாச் சந்தனத்தையும் விட வெள்ளைச் சந்தனம் மிகவும் ச்ரேஷ்ட்டமானது,ஆகவே எப்படியாவது முயற்சி செய்து அதைக் கொண்டு வந்து பூஜைக்குப் பயன் படுத்தவும்
வேறு வகை
1பச்சைக்.கற்பூரம்,2. வெள்ளைச் சந்தனம்,3,கஸ்தூரி,4,குங்குமப்பூ இவற்றை
ஒன்றாகாச் சேர்த்தால் ‘ஸர்வகந்தம்‘ஆகும் இதுவே ஸகலமான தேவதேவியர்க்கும் ப்ரியமானது ஆகும்
அஷ்ட கந்தம்(எட்டு வகை வாஸனை)
ஸகல தேவ -தேவியரின் பூஜையின் போது,
1,கோரோசனை,2,வெள்ளைச் சந்தனம்,3,தேவதாரு,.4,பச்சைக்
கற்பூரம்,5,க்றுப்பு அகில்,6,சுக்கு,7,கஸ்தூரீ,8,குங்குமப்பூ ஆகிய இந்த எட்டு
வாஸனைப் பொருள்களைப் பயன்படுத்துவது விசேஷமாகும்
தேவியர்க்குரிய அஷ்ட-கந்தம்
1,குங்குமப்பூ,2,கார் அகில்,3,பச்சை,4,கற்பூரம்,5,யானை மதநீர்,6,வெள்ளைச் சந்தனம் ,7,கோரோசனை,8,செஞ்சந்தனம் ஆகியவற்றைக் கலந்த வாஸனைப் பொருள்களைக் கொண்டு தேவியரின் சிறந்த யந்த்ரத்தை எழத வேண்டும் என்றது ஒரு பழஞ்சுவடி,
No comments:
Post a Comment