உங்கள் வாழ்க்கையில் பன்னிரண்டு கும்பாபிஷேகங்கள் பார்த்துவிட்டால் ,உங்கள் ஜாதகத்தை பற்றி கவலை தேவை இல்லை. இதன் விவரம் பின்வருமாறு.
அதாவது இந்த கும்பாபிஷேகம் ,புதியதாக கட்டிய கோயிலுக்கு மட்டுமே பொருந்தும்.
இப்படி செய்யும் நிகழ்ச்சிக்கு ஆவர்த்தம் என்று பெயர்.
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சிலைகளை மறுபடியும் வைத்துசெய்வது - அனுவர்த்தம் எனப்படும்.
ஏற்கனவே உள்ள பாழடைந்த கோயில்களை புதுப்பித்து செய்வது - புனஸ்வர்த்தம் என்று பெயர்.
திருட்டுப்போன சிலைகளை வைத்து கோயில் கட்டி செய்வது - அந்தரிதம் என்று பெயர்.
இதில் நீங்கள் பார்க்கவேண்டியது, தோஷம் போக- ஆவர்த்தம் எனப்படும் புதுகில்களின் கும்பாபிஷேகம் ஆகும்.
மீதியெல்லாம் அஷ்டபந்தனம் என்று சொல்லுவார்கள். இதற்கும் பலன் உண்டு. இருந்தாலும் முன்போல் வராது எனலாம்.
புதிதாக கட்டிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆனதில் இருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சக்தி இருக்கும். மீண்டும் அதுபோல் செய்யவேண்டும். இல்லையென்றால் சக்தி அங்கு இருக்காது. ஆகையால்தான் சில கோயில்களுக்கு சென்று வந்தாலும் நமக்கு காரியங்கள் நடப்பதில்லை.
ஆகவே மக்களே, நீங்கள் போகும் கோயில்களில் ஆறு கால பூஜை நடக்கிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள் முதலில். பிறகு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை கும்பாபிஷேகம் நடைபெற்றதா என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கும் காரியங்கள் நடைபெறும். தெய்வத்தை குறை
No comments:
Post a Comment