கல் என்றால் உயிரற்ற ஜடப்பொருள் என்று நினைக்கிறோம். கல்லுக்கும் உயிர் உண்டு
என்கிறார் மாணிக்கவாசகர். சிவபுராணத்தில், ஓரறிவு கொண்ட புல், பூண்டு முதலிய
பிறவிகளை எடுத்து அயர்ந்து விட்டதாகச் சொல்லும் போது, கல்லாகவும் பிறந்ததாக
குறிப்பிடுகிறார். கல்லிலும் மூன்று வித ஜாதிகள் உண்டு என்கிறது சிற்ப சாஸ்திரம்.
கல்லில் எழும் ஒலியைப் பொறுத்து, ஆண், பெண், இரண்டும் அல்லாதது என மூன்றாகப்
பிரிப்பர். தட்டும் போது, கனமான மணியோசை போல் ஒலி எழுப்புவது ஆண். மெல்லிய ஓசை
எழுப்புவது பெண். ஒலியே எழுப்பாதது அலி. இந்த கற்கள் தூங்கும் நேரம், விழிக்கும்
நேரம் கூட இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. தஞ்சாவூர் நந்தி, சுசீந்திரம்
ஆஞ்சநேயர் சிலைகள் இப்போதும் உயிரோட்டத்துடன் உள்ளதைப் பார்க்க முடிகிறது.
No comments:
Post a Comment