எந்தச் செயலில் ஈடுபட்டாலும் முதல் பூஜை விநாயகருக்குரியது என்பதை உணர்த்த ஒரு
சம்பவம் நடந்தது. சிவன் திரிபுர அசுரர்களை வதம் செய்ய புறப்பட்டார். அதற்கான தேர்
செய்த போது தேவர்கள், விநாயகரை பூஜிக்கவில்லை. உலகாளும் சிவன் என்றாலும்,
விநாயகருக்கே தந்தை என்றாலும், இந்த பொது சட்டத்தை மீறியதால், அதற்குரிய சோதனையை
வழங்க விநாயகர் தயங்கவில்லை. தேரின் அச்சு முறியும்படி செய்தார். இந்த தடைக்கு
காரணம் விநாயக பூஜை செய்யாததே என சிவனுக்கு தெரிய வந்தது. பின், பூஜையை முடித்து
போருக்குப் புறப்பட்டார். அசுரர்களை அழித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்
என்பதை விநாயகர் நிரூபித்துக் காட்டினார்.
No comments:
Post a Comment