மலர்கள் தூய்மையானது,அழகானது,இறைவன் திருமேனியை தழுவும் பாக்கியமுடையது,மேலும் தன்னை சூடியவர்களின் அழகினை கூட்டுவது.
அந்த மலர் தீயில் கருகினால் துர்நாற்றம் வீசும்,அதன் அழகும் பொழிவும் கருகி அவலட்சணமாகிவிடும்.
அதைபோலவே நமக்கு இறைவன் அளித்த இப்பிறவியும், வாழும் காலத்தில் இயன்றவரை தான,தர்மங்கள் செய்தல்,இறைவனுக்கும், அவனது அடியார்களுக்கு தொண்டு செய்வதும், ஏழை எளியாரிடத்திலும் ,சிற்றுயிர்களுக்கும் உதவி செய்வதும் நாம் அடைந்த இப்பிறப்பை உன்னதமாக்கி, நமது சமூகத்திற்கும் உயர்வை பெற்றுதரும்.
நாமும் ்நற்செயல்களின் இறைவன் சூட்டும் மலர் மாலையாக இருக்க முயற்சிப்போம்.
நல்லதொரு செயலை ஆயிரம் இன்னல்கள் வந்தாலும், நமது விடாமுயற்சியும்,இறை பக்தியும் நம்மை காத்து துணை செய்யும்.
"நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு."
No comments:
Post a Comment