சிவாச்சாரியார்... பற்றி சிவாகமம் தரும் விளக்கம்....!!!
ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன:
1. நித்தியக் கிரியைகள்
2. நைமித்திகக் கிரியைகள்
3. காமியக் கிரியைகள்.
2. நைமித்திகக் கிரியைகள்
3. காமியக் கிரியைகள்.
தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள். ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும்
விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள்.
ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ, செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும்
3.1 நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.
3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.
3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.
3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்
3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்
3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். . மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள். ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மற்றும் மந்திரங்களுடனே தான் செய்யப்படுதல் வேண்டும். பாவனை இல்லாது மந்திரங்களுடன் மட்டும் கரியைகளைச் செய்தால் அவை பயனற்றவையாகும். பாவனையும் இல்லாது, மந்திரங்களையும் மொழியாது, கிரியைகளைச் செய்தால், அச்செய்கைகள் தேவர்களை மகிழ்விக்காது; அசுரர்களையே மகிழ்விக்கும்; அதனால் புண்ணியம் தேய்ந்து பாவமே வளரும். எனவே, பூஜைகளில் முழுப்பயனும் மக்களைச் சென்றடைய, பாவனை, கிரியை, மந்திரம் ஆகிய மூன்றிலுமே லோபம் (குறைகள்) இல்லாமல் அனுஷ்டானத்தைச் செய்யுமாறு சிவாச்சாரியார்கள் குருமுகமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
3.7 பக்தியில்லாத சிவாச்சாரியார்: தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா. ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார்
No comments:
Post a Comment