Tuesday, September 16, 2014

திசைக்கு ஒரு விநாயகர்


விநாயகர் சந்நிதி இல்லாத கோயிலே இல்லை எனலாம். பெரிய சிவாலயங்களில் பல விநாயகர் சந்நிதிகள் இருந்தாலும், அந்த ஸ்தலத்திற்குரிய விநாயகர் (தல விநாயகர்) நிருதி மூலை என்னும் தென் மேற்கில் வீற்றிருப்பார். மற்ற விநாயகர் சந்நிதிகளை விட, தல விநாயகருக்கே அன்றாட பூஜையில் முதன்மை வழங்கப்படும். ராஜகோபுரத்தில் இருப்பவர் கோபுர விநாயகர் என்றும், கொடிமரத்தில் வீற்றிருப்பவர் கொடிமரத்துப் பிள்ளையார் என்றும், சிவன் சந்நிதியில் வலப்புறம் இருப்பவர் துவார விநாயகர் எனவும் குறிக்கப்படுவார். இது தவிர தேர்நிலை அருகில் இருப்பவரை தேரடிப் பிள்ளையார், தீர்த்தக்கரையில் இருப்பவர் படித்துறை விநாயகர், கோயிலின் தென்கிழக்கில் உள்ளவர் அக்னி விநாயகர், தென்மேற்கில் கன்னிமூலை கணபதி, வடமேற்கில் வருண கணபதி, வடகிழக்கில் ஈசான்ய கணபதி அருள்புரிவார்கள்

No comments:

Post a Comment