திருமணத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடக்கும்.
இதில் சம்பந்திகள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி, தாம்பூலம் என்னும் வெற்றிலைபாக்கு மாற்றிக் கொள்வது முக்கியமான சடங்கு. மங்கலப் பொருட்களில் ஒன்றான வெற்றிலையில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். உலகைக் காக்கும் தாயான மகாலட்சுமியை சாட்சியாக வைத்து, மணவாழ்க்கையை நிச்சயிப்பதற்காகவே இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அக்னி சாட்சியாக திருமணம் நடக்கும் முன், லட்சுமி சாட்சியே முதல் சாட்சியாகக் கொள்ளப்படுகிறது.
திருமணத்திற்கு பத்திரிகை அளிக்கும் போது, தாய்மாமன் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். "சுருள் வைத்தல்' என்று இதைச் சொல்வார்கள். வீட்டில் எந்த தெய்வத்திற்கு பூஜை நடந்தாலும், வெற்றிலை பாக்கு வைப்பது அவசியம்.
வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்கும்போது வெற்றிலை கொடுப்பது சிறப்பு. பாக்கு இல்லாமல் வெற்றிலையை மட்டும் தனியாக வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

No comments:
Post a Comment