நந்திகேஸ்வரர் ஒரு சிறந்த பக்திமான்.
சிவனிடம் அவருக்கு அலாதியான பக்தி இருந்தது. அதனால், அவரது வாழ்க்கை பவித்ரமானதாக விளங்கியது. புனித பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) அவர் எண்ணற்ற முறை பாராயணம் செய்து வந்தார். சின்னஞ்சிறு வயதிலேயே தேவர்களின் வரிசையில் இடம் பெற்று விட்டார்.
நஹுஷன் ஒரு அரசன். இந்திர பதவி வேண்டி 99 யாகங்கள் செய்து, அந்தப் பதவியையும் பிடித்து விட்டான். பதவி கிடைத்த ஆணவத்தில், இந்திரனின் மனைவி இந்திராணியின் மாளிகைக்கு புறப்பட்டான். சப்தரிஷிகளை அழைத்து, தன் பல்லக்கை தூக்கிச் செல்ல கட்டளையிட்டான். அவர்கள் சுமந்து சென்ற போது,""ஸர்ப்ப...ஸர்ப்ப'' (வேகமாகச் செல்லுங்கள்) என்று கடுமை காட்டினான்.
இந்தச் சொல்லுக்கு "பாம்பு' என்ற அர்த்தமும் உண்டு. முனிவர்கள் அதற்கு பதிலளிக்கும் வகையிலும், அவனுக்கு சாபமிடும் வகையிலும் "ஸர்போபவ' என்றனர். அவ்வளவு தான்! பெரிய மலைப்பாம்பு வடிவம் கொண்டு, பல்லக்கில் இருந்து கீழே சரிந்து விழுந்தான்.
ஆணவம் காரணமாக இந்திரனாய் இருந்தவன் பாம்பாய் மாறி அல்லல்பட்டான். பதவிக்காலத்தில் நற்செயல்கள் செய்பவர்களே நற்கதியடைவார்கள். தீய செயல்கள் இழிநிலையை உடனடியாகவோ, காலம் தாழ்த்தியோ நிச்சயம் பலன் தந்து விடும். செய்த செயலின் விளைவிலிருந்து யாராலும் தப்ப முடியாது.

No comments:
Post a Comment