புனிதயாத்திரை செல்வதில் தனித்தன்மை மிக்கதாக சபரிமலை பயணம் அமைந்துள்ளது. 41நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து மனதாலும், உடலாலும் துõய்மை காக்கின்றனர். கற்கள் நிறைந்த காட்டுப்பாதையில் குளிர்காலத்தில் மலையேறிச் செல்ல வேண்டி இருப்பதால், உடல்வலிமை தேவையானதாக உள்ளது. எனவே பிரம்மச்சர்யம் அனுஷ்டிக்கின்றனர். ஆடம்பரம் இன்றி அனைத்து பக்தர்களும் சரிசமமாக நீலம், கருப்பு உடையில் சமத்துவத்தை வளர்க்கின்றனர். வழக்கமான நடைமுறை வாழ்வில் இருந்து விலகி, ஆறு,மலை என்று இயற்கையான சூழலில் மலையேறி, உற்சாகம் பெறுகின்றனர். இதுவே, சபரிமலை யாத்திரையின் தனித்தன்மை.
No comments:
Post a Comment