தீபாவளி யாருக்காக! நரகாசுரனுக்காக! அவன் யார்? திருமாலுக்கும், பூமாதேவிக்கும்
பிறந்த பிள்ளை! இரண்டு வைரங்களுக்கு பிறந்த பிள்ளை கரிக்கட்டையாய் வளர்ந்தான்.
இப்படித்தான் நல்ல பெற்றோர் இருந்தும் சில பிள்ளைகள் தறுதலைகளாய் திரிகிறார்கள்.
அவர்களுக்காகத் தான் இந்தக் கதை.
மீனவன் ஒருவன் சரியாக விடியாத ஒரு விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் ஆற்றிற்கு சென்றான். கரையில் ஒரு சிறிய மூடை தட்டுப்பட்டது. அரைகுறை வெளிச்சத்தில் அந்த மூடையில் ஏதோ கற்கள் இருந்தது தெரியவர, அவற்றை ஒவ்வொன்றாக ஆற்றுக்குள் வீசியெறிந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் வெளிச்சம் பரவியது.
மீனவன் மீன் பிடிக்க தயாரானான். கிளம்பிய நேரத்தில் ஏதோ காலில் குத்த குனிந்து பார்த்தான். ஒரு கல் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது. பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டான். ஏனெனில், அது ஒரு வைரக்கல். ""ஐயோ! மூடையில் இருந்த வைரக்கற்களையா சாதாரணக் கற்கள் என நினைத்து தண்ணீருக்குள் வீசினேன்,' 'என புலம்பினான். தன் அதிர்ஷ்டமின்மையை நொந்து கொண்டான்.
இதுபோல் தான் ஒவ்வொருவருக்கும் தங்கமான பெற்றோர் கிடைத்துள்ளனர். அவர்களையும், அவர்களது வைரம் போன்ற கருத்துக்களையும் பிள்ளைகள் பலர் உதாசீனப்படுத்துகின்றனர். இனியேனும், அவர்கள் சொல் கேட்டு நல்ல பிள்ளைகளாய் நடப்பீர்களா!

No comments:
Post a Comment