* பணம் இல்லாததால் நேரில் சென்று பல கோயில்களைத் தரிசிக்க முடியவில்லை.
மனதிற்குள் அந்தந்த தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் பலன்
கிடைக்குமா?
பக்தியோடு எந்தக் கோயிலுள்ள இறைவனை வழிபட்டாலும் அதற்கு முதலிடம் கொடுத்து அருள்புரிவார். சென்னை திருநின்றவூரில் அற்புத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஒரு அரசன் சிவபெருமானுக்கு கருங்கல்லில் கோயில் கட்டிக் கொண்டிருந்தான். திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த பூசலாருக்கு தானும் அதே போல கோயில் கட்ட ஆர்வம் எழுந்தது. ஆனால், கையில் பணம் கிடையாது. பத்மாசனத்தில் அமர்ந்து மனதிற்குள் கோயில் கட்டினார். ஒவ்வொரு நாளும் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தார். அரசர் வைத்த நாளும், அடியவர் வைத்த நாளும் ஒரே நாளாக அமைந்தது. அந்நாளுக்கு முதல் நாள் இரவு கனவில் தோன்றிய சிவன், "நாளை நீ குறித்த நேரத்தில் பூசலார் என்னும் பக்தரும் கும்பாபிஷேகம் நடத்த உள்ளார். நான் அங்கு சென்று வர தாமதமாகும்' என்றார். அரசனும் அவரைத் தேடிக் கண்டு பூசலாரை வணங்கியதாக பெரியபுராணம் கூறுகிறது. இதிலிருந்து மன வழிபாட்டின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்

No comments:
Post a Comment