Friday, November 28, 2014

பத்தாயிரத்து எட்டு ஹோமங்கள் உள்ளன

ஹோமங்கள், யாகங்கள், என நிறைய இருக்கிறது. ஆனால் நாம் ஒரே ஒரு கணபதி ஹோமத்தை மட்டும், அதுவும், சுமார் அரை மணிநேரம் செய்துவிட்டு, நாங்கள் ஹோமம் செய்துவிட்டோம் என சொல்கிறார்கள்.
பொதுவாக,
கணபதி ஹோமம் பத்து மணி நேரம் ஆகிறது.நிறைய மந்திரங்கள் உள்ளன.
சில பெரிய யாகங்கள், உத்திராயனத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. அவைகள்,
அஸ்வமேத யாகம்,
அதி ராத்ர சோம யாகம்
வாஜபேய யாகம் 
சௌதாமினி யாகம் 
ஐந்தர யாகம் 
ராஜசூய யாகம் 
தர்சபூர்ண யாகம் 
இதுபோல் ஆயிரக்கணக்கில் உள்ளது அன்பர்களே. இந்த இடம் போதாது சொல்லுவதற்கு.
எதற்காக நான் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், சிலபேர், கணபதி ஹோமன் நவகிரக ஹோமம்,இவைகளை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் செய்துவிட்டு, எல்லாம் செய்துவிட்டதாக சொல்லிகொண்டிருக்கிறார்கள்.
பத்தாயிரத்து எட்டு ஹோமங்கள் உள்ளன. இவைகள் பொதுவாக,அம்பாளுக்கும், சிவனுக்கும்,முருகனுக்கும்,விஷ்ணுவுக்கும் சொல்லப்பட்டுள்ளன.
முக்கியமாக, முழுமுதற்கடவுளாகிய வினாயகப்பெருமானுக்கு மட்டும் ஐம்பத்தி ஒரு விதமான ஹோமங்கள் உள்ளன.
வாழ்நாள் நமக்கு போதாது.
உத்திராயனத்தில் செய்யும் ஹோமங்களில் ,அதி ராத்ர சோம யாகமும், வாஜபேய யாஹமும், மிகவும் முக்கியம் வாய்ந்தவை 

No comments:

Post a Comment