Thursday, December 4, 2014

எட்டுகிற தூரத்தில் சொர்க்கம் இருந்தாலும் தருமம் தவறவில்லை -- தருமர்....


மகாபாரதத்தின் கடைசீயில் தருமன் நடந்தே கைலாசம் நோக்கி செல்கிறான். போகும் வழியில் நாய் ஒன்று அவனை பின் தொடருகிறது. அவன் ஓய்வு எடுக்கும் போது நிற்கிறது, நடந்தால் கூடவே நடக்கிறது. இப்படியாக இருவரும் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். சில நாட்கள் ஆகி விட்டன. வானத்தில் இருந்து தங்கத் தேர் ஒன்று வந்து தருமன் முன் நிற்கிறது.
அது தருமனை வானுலகத்துக்கு கூப்பிட்டு போக வந்திருக்கிறது. தருமன் அதில் ஏறுகிறான், நாயும் பின் தொடருகிறது. தேரோட்டி நாயை தேரில் ஏற்ற மறுத்து விடுகிறான், அவனுக்கு கிடைத்த உத்தரவு தருமனை ஏற்றிக்கொண்டு வரும்படி மட்டுமே. தருமனுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை, தேரை விட்டு இறங்கி விடுகிறான்.
“ஐயா, ஒரு நாய்க்காக சொர்க்கத்தை விடுகிறீர்களா ?” என்று தேரோட்டி கேட்ட,
“இந்த நாய் என்னுடைய நண்பன் இப்போது, கூடவே வருகிற நண்பனை விட்டு விட்டு செல்வது தருமம் அல்ல என்று தோன்றுகிறது” என்கிறான் தருமன்.
அப்போது ஒரு அதிசயம் நடந்தது. அங்கே தரும தேவதை தோன்றி சொர்க்கம் கிடைக்கிற தருவாயிலும் தருமன் எப்படி நடக்கிறான் என்று பார்க்கவே இந்த பரீட்சையை வைத்தது என்று சொல்லி அவனை வாழ்த்தி சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தது தரும தேவதை...
எட்டுகிற தூரத்தில் சொர்க்கம் இருந்தாலும் தருமம் தவறவில்லை இது தான் தருமர்....

No comments:

Post a Comment