கண்ணனுக்கு உரியில தொங்குற வெண்ணெய் மேல ஒரு கண்...யசோதா எப்போ வெளில போவான்னு காத்துக்கொண்டு இருக்கின்றான்.யசோதவிற்க்கு தெரியாதா கண்ணன் இதுக்காக காத்திருக்கான் என்று ..
அவள் மும்மரமாய் ஒருகொத்து மணியை கட்டுகிறாள் கண்ணன் கழுத்தில்..அப்போதானே கண்ணன் வெண்ணையை எடுத்தா சத்தம் கேட்கும்.கண்ணன் நண்பர்களுக்கு கவலை இனிவெண்ணெய் எப்படி கிடைக்கும்...
அவன் மேல கிடந்த மணிகள் ,"ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைத்து சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டது..
ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த மணிகளுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வைத்திருப்பது உண்மையாக இருந்தால் நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்!” அப்படின்னு! அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, ..மணிகளும் அவனுக்கு உதவுவதாய் உறுதியளித்தது .கண்ணனின் ஒவ்வொரு நண்பர்களாக சாப்பிட்டனர் .மணியும் அமைதியாக இருந்தது.
இறுதியாக கண்ணன் வந்தான் மணி அடிக்கவில்லை..
பானையை எடுத்தான், மணி அடிக்கவில்லை..
மூடியைத் தொறந்தான், மணி அடிக்கவில்லை
வெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கவில்லை.
அள்ளின வெண்ணெயை வாயில் வைத்தான்..
அவ்வளவுதான்! ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடித்தது...
கண்ணனுக்கே ஷாக் ஆயிடுச்சு! “நான் சொன்னது மறந்து போச்சா! ஏன் அடிச்சே?” அப்படின்னு கோவிச்சுக்கறான்.
“
“
அதற்க்கு அந்த மணிகள் சொன்னது "என்ன கண்ணா பண்ணுவேன்? உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே? அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னித்துவிடு என்று.
No comments:
Post a Comment