Saturday, January 17, 2015

யாம் செய்த சிவத்துரோகங்களும், அதற்க்கான பலன்களும்."

>>

"யாம் செய்த சிவத்துரோகங்களும், அதற்க்கான பலன்களும்."
எம்மை சிவத்துரோகம் செய்யாதே என்றும், சிவ அபராதங்களை தேடிக்கொள்ளாதே என்றும் பலர் எம்மை சொல்லியதுண்டு.
எமது சிவத்துரோக செயல்கள்:::
1)மறைகளை பின்பற்றாதது.
2)இப்படித்தான் வழிபடவேண்டும் என்ற முறையை பின்பற்றாதது.
3)மறைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அப்பாற்பட்டவர் ஈசன் என்று குரல் கொடுப்பது.
4)சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள் என்று சொன்னது.
5)ஈசனைத்தவிற மற்ற எல்லாமே மாயதெய்வங்கள் மற்றும் சிறுதெய்வங்கள் என்று உரக்க சொன்னது.
6)சிவச்சின்னங்கள் அனியும் தகுதி எல்லோர்க்கும் உண்டு என்றது.
7)சிவச்சின்னங்கள் அனிய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. நமச்சிவாய என்று சொல்லி ஈசனை முதன்மைபடுத்தி எதையும் செய்யலாம் என்றது.
இதுப்போல் ஈசனைபற்றி அனைவருக்குள்ளும் இருந்த பயத்தை நீக்கி, ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானவன் என்று நாங்கள் உணர்ந்ததை பிறருக்கும் உணர்த்தும் வகையில் பதியப்படும் பதிவுகள், பலருக்கு சிவத்துரோகமாக தெரிகிறது.
இத்தகைய சிவத்துரோகத்தால் யாம் கண்ட பலன்கள்:::
)சிவபெருமான் மிக எளிமையானவர் என்றும், அவர்மீது அன்போடு இருத்தலே சிவனடி சேர ஒரே வழியென்று அன்பர்கள் பலர் உணர்ந்தது.
)ருத்திராக்கம் அனியவும் திருநீரு பூசவும் பலருக்கு ஆசை வந்தது.
)அந்த ஆசையினால் இன்று பலரும் சிவச்சின்னங்கள் அனிந்துள்ளனர்.
)கட்டுப்பாடுகளுக்கு பயந்து சிவதிடமிருந்து ஒதுங்கி இருந்த பலர், கட்டுப்பாடுகளை துச்சமாக கருதி சிவனோடு பழகுகின்றனர்.
) சிவபெருமானைப்பற்றி தெரியாதவர்களுக்கு, ஈசனின் பெருமைளை பறைசாற்றுகின்றனர்.
)சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுள் என்று பலரும் உணர்ந்துவிட்டனர்.
பொதுவாக சிவத்துரோகம் செய்பவர்களுக்கு நெஞ்சம் பதைபதைக்கும். ஈசன் நம்மை தண்டிக்கநேரிடுமோ என்ற அச்சம்தான் வரும்.
ஆனால் யாம் செய்யும் சிவத்துரோகத்தினால், பலரும் சிவபெருமானை நினைக்கவும் உணரவும் செய்கின்றனர்.
இத்தகைய சிவத்துரோகம் செய்ததை என்னி என் நெஞ்சம் நெகிழ்கிறது. இந்த செயலுக்கெல்லாம் ஈசன் எப்போது எமக்கு கூலி தருவான் என்று காத்திருக்கிறேன்...... ஆனந்தமா

No comments:

Post a Comment