Thursday, January 29, 2015

பிரம்மஹத்தி தோஷம்


பிரம்மஹத்தி தோஷம்
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? இதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார். அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்தபிறகு இறைவனே எடுத்துக்கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும்போது, சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா,என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்தபாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி ‘ தோஷம் என்பதாகும்.
ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதாபிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே, இராவணனை வதம் செய்தார், ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால், பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார். எனவே, பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் , கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால், அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.
இதுபோன்ற நிலையில் , பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம். :
சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்தனர்
பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
நாம் வணங்கும் பல இறைவன்கள் அசுரர்களை கொன்றதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து பின் அதற்கு பரிகாரம் தேடியதாக பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரம்மஹத்தி திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்று அதனால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி இத்தலத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.
பரிகாரம்-1
திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப் புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து, முழங்கால் மேல் முகத்தை வைத்துக் கொண்டு, காத்திருப்பதுதான் பிரம்மஹத்தி.
பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல், மகாலிங்க சுவாமி சன்னதி சென்று நெய் தீபம் ஏற்றி, குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும்.
மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடக் கூடாது. காற்று, உப்பு, நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் நீங்கும்.
பரிகாரம்-2
நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
நெய் 1/2 லிட்டர்;
இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்
.
1. பலிபீடம்;
2. கொடிமரம்;
3. கொடிமர நந்தி
4.அதிகார நந்தி;
5. வாயில் கணபதி;
6. துவார பாலகர்;
7.சூரியன், சந்திர பகவான்;
8. சமயக் குரவர்கள்;
9. சப்த கன்னிமார்கள்;
10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
12. சுர தேவர்;
13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;
14. தட்சிணாமுர்த்தி
15. கால பைரவர்;
16. சண்டிகேஸ்வரர்;
17. சனீஸ்வரர்;
18. சிவன் சன்னிதி;
19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.
மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.
பரிகாரம்-3
தீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ராமேஸ்வரத்தில் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்) 
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
.........................................................................................
குரு பிரம்ம ரிஷி ஜோதிட நிலையம்
‘ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம்
வர்த்தனி குல சம்பிரதாம்
பதவீ பூர்வ புண்ணியானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா.!’

No comments:

Post a Comment